உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு

மைசூரு : கலபுரகியைச் சேர்ந்த சில குடும்பங்கள், தசரா பண்டிகைக்காக வியாபாரம் செய்ய மைசூருக்கு வந்தன. அவர்களில் 1-0 வயது சிறுமியும் இருந்தாள். பலுான், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை சாமுண்டி மலை, பன்னி மண்டபம், தேவராஜ் மார்க்கெட் என, பல இடங்களில் சிறுமியின் பெற்றோர் விற்றனர். பொருட்காட்சி மைதானம் அருகில், தற்காலிக கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். 8ம் தேதி, நள்ளிரவு வரை வியாபாரம் நடந்தது. அதன்பின் கூடாரத்துக்கு வந்து உறங்கினர். தன் தாயின் பக்கத்தில் சிறுமி படுத்திருந்தாள். மழை பெய்ததால் சிறுமியின் பெற்றோர் அதிகாலை 4:00 மணியளவில் விழித்துக் கொண்டனர். அடையாளம் அப்போது சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுப்பகுதியில் எங்கும் இல்லாததால், நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கூடாரத்தில் இருந்து, 50 அடி தொலைவில் சிறுமியின் உடல் கிடந்தது. உடலில் உடைகள் இருக்கவில்லை. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். சுற்றுப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மைசூரின், சித்தலிங்கபுராவில் வசிக்கும் கார்த்திக், 31, என்பவரை போலீசார் அடையாளம் கண்டனர். இவர், மாண்டியாவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு முன், சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் கார்த்திக் நடமாடியதால், அவரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர். கார்த்திக், சாம்ராஜ் நகரின் கொள்ளே காலுக்கு பஸ்சில் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. போலீசார் தாமதிக்காமல், கொள்ளேகாலுக்கு சென்று நள்ளிரவில் அவரை கண்டுபிடித்தனர். மைசூருக்கு அழைத்து வரும் வழியில் மேடகள்ளி அருகில், ஏட்டு வெங்கடேஷை தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சித்தார். உறுதி எச்சரிக்கையை மீறி போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சி செய்ததால், எஸ்.ஐ., ஜெய்கீர்த்தி சுட்டதில், கார்த்திக்கின் வலது காலில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்தார். அவரை பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர், மருத் துவ மனைக்கு சென்று, கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது, அவர் தான் என்பது உறுதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nagendhiran
அக் 12, 2025 07:21

இதெல்லாம் செய்யாதீங்கப்பா பாவம்? அவணுக்கு சரியாண தண்டனையாக அதை நீதிமன்றமே சட்டப்படி செய்யனும்? இது மாதிரி நிகழ்வுகள் நடக்ககூடாது என்றால்"இதான் ஒரே வழி?


Natchimuthu Chithiraisamy
அக் 11, 2025 19:18

மாண்டியாவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது தெரிய வந்தது.நான்கு மாதங்களுக்கு முன், சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். நீதி அரசருக்கு இந்த செய்தி செல்லட்டும் விடுதலைக்கு பின் வாரம் இரு நாள் பல காவல் நிலையங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றால் மட்டுமே குற்றம் குறையும்


Krishnamurthy Venkatesan
அக் 11, 2025 16:58

ஒருவேளை இந்த குற்றவாளி தஸ்வந்த் வழக்கின் தீர்ப்பை படித்திருப்பானோ? என்ற ஐயம் எழுகிறது.


Rathna
அக் 11, 2025 14:00

சுட்டது தான் சூட்டிங்க. ஒரு அடி உயரம் சென்டர் பார்த்து சுட்டு இருந்த பாராட்டி இருக்கலாம்.


Barakat Ali
அக் 11, 2025 09:27

குற்றவாளியே ஒப்புக்கொண்டாலும் விடுதலை செய்யப்படுகிறார்...


நிக்கோல்தாம்சன்
அக் 11, 2025 09:25

சென்னையில் இது போன்று செய்திருந்தா விடுதலை கிடைத்திருக்கும்.


Ramesh Sargam
அக் 11, 2025 08:36

வழக்கு நீதிமன்றத்துக்கு செல்லும். அங்கே குற்றவாளியின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அந்த கொடூரனை விடுதலைசெய்யும். உதாரணம்: சென்னையில் இதேபோன்று ஒரு குற்றம் செய்த தஸ்வந்த் வாலிபன் வழக்கு. எனக்கு ஒரு சந்தேகம், நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை தண்டிக்க இருக்கின்றனவா அல்லது அவர்களை காப்பாற்ற இருக்கின்றனவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை