உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, லாரியின் பின்னால் பைக் மோதி வாலிபர் உயிரிழந்தார்.கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாம்பாடியைச் சேர்ந்தவர் சனல், 25. பிலிம் எடிட்டிங் வேலை செய்யும் இவர், வேலை தொடர்பாக பெங்களூருக்கு, கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த நண்பர் இவியோண், 25, என்பவருடன், கொச்சி - -கோவை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு வடக்கஞ்சேரி சுவட்டுபாடம் என்ற இடத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் ரோட்டோரம் நின்ற லாரியின் பின் பகுதியில் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே சனல் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இவியோண் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வடக்கஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !