உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

ராஜ்கோட்: குஜரா த்தின் ராஜ்கோட்டில் உள்ள கிரிஸ்டல் மால் அருகே நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, இளைஞர் ஒருவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யு., சொகுசு கார் மோதிவிட்டு நி ற்காமல் சென்றது. இதில், பைக்கில் சென்ற இளைஞர் சாலையில், 200 அடி துாரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் அபிஷேக் நாதானி, 20, என தெரியவந்தது. இவர், இங்குள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வந்தார். இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய நபர், அப்பகுதியைச் சேர்ந்த ஆத்மன் படேல், 20, என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ