| ADDED : பிப் 29, 2024 11:21 PM
மன அழுத்த ஆலோசனைக்கு 'யு டியூப் சேனல்'l சுகாதார சேவைகளை நவீனப்படுத்த 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்தாண்டுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l சுகாதார சேவைகளை நிர்வகிப்பதற்காக, 'பெங்களூரு சுகாதார கமிஷனர்' என்ற புதிய பதவி உருவாக்கப்படும். நகரின் அனைத்து விதமான சுகாதார சேவைகளும் அவரின் கீழ் கொண்டு வரப்படும்l நகரின் 144 நகர ஆரம்ப சுகாதார மையங்கள்; 27 மகப்பேறு மருத்துவமனைகள்; 225 நம்ம கிளீனிக்குகள்; 7 மருத்துவமனைகள் 20 கோடி ரூபாயில் நிர்வகிக்கப்படும்l 'ஒருங்கிணைந்த வலுவான ஆரோக்கியம்' என்ற பெயரில், அடுத்த 3 ஆண்டுகளில் சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும். இந்தாண்டில், 27 இலவச பிசியோதெரபி மையங்கள் அமைக்கப்படும். 'ஆரோக்கிய சாரதி' என்ற பெயரில், வீட்டு வாசலுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். 100 பரிசோதனை மையங்களில், 200 வெவ்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். 14 அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனை சுற்று வட்டாரங்களில், 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மார்கள் கூலி வேலைக்கு செல்லும் போது, குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்l மருத்துவர்கள் மூலம் மன அழுத்தத்துக்கு தீர்வு காணும் ஆலோசனைகள் வழங்குவதற்காக, 'மனோபிம்பா' என்ற யு டியூப் சேனல் துவங்கப்படும்l 70 கோடி ரூபாயில், 50 புதிய இந்திரா உணவகங்கள் திறக்கப்படும். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு உணவகம் திறக்கப்படும்l 15 கோடி ரூபாயில், மின் மயானங்கள் மேம்படுத்தப்படும்l தெரு நாய்கள் இன விருத்தியை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 2 மண்டலங்களில் ஆரோக்கியமான இறைச்சி மையங்கள் அமைக்கப்படும். விலங்கு கழிவுகளை அப்புறப்படுத்த 4 மையங்கள் அமைக்கப்படும். இதற்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.