வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதிலென்ன அவதி? ஓவர் பில்டப் தேவையா??
சுந்தரும் - மோடிஜியும் சந்தித்தார்கள் - அதனாலா ?
பிரளயம் வரவில்லையே யு tube இல்லாததால். நன்று
அடப்பாவமே... உலகம் சுற்றுவதை நிறுத்தினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்... ஆனால் நோ யுடியூப் - ....
யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.யுடியூப் கூகுளுக்குச் சொந்தமான ஒரு பிரபலமான அமெரிக்க ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளம். இந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். இந்த தளத்தில், பயனர்கள் இலவசமாக வீடியோக்களைப் பார்க்கவும், பகிரவும், லைக் செய்யவும், கருத்து தெரிவிக்கவும் மற்றும் சொந்தமாக வீடியோ பதிவேற்றவும் முடியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjaa6z1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வீடியோ பதிவேற்றுபவர்களுக்கு, எவ்வளவு பேர் பார்த்து இருக்கின்றனர் என்பது அடிப்படையில் வருமானம் கிடைக்கும். எனவே வீடியோ பதிவிடுவதை ஏராளமானோர் தொழிலாக கொண்டு உள்ளனர். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள யுடியூப் இணையதளம் இன்று (பிப்ரவரி 18) காலை சற்றுநேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் வீடியோக்கள் பார்க்க முடியாமல் தவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக யுடியூப் இணையதளத்தின் முகப்பு பக்கம் செயல்படாமல் முடங்கியது. இந்திய நேரப்படி காலை 6:29 மணி முதல், யுடியூப் சமூக ஊடக தளத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக 2,40,707 பேர் புகார் அளித்து இருந்தனர். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்தது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.
இதிலென்ன அவதி? ஓவர் பில்டப் தேவையா??
சுந்தரும் - மோடிஜியும் சந்தித்தார்கள் - அதனாலா ?
பிரளயம் வரவில்லையே யு tube இல்லாததால். நன்று
அடப்பாவமே... உலகம் சுற்றுவதை நிறுத்தினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்... ஆனால் நோ யுடியூப் - ....