உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரின் போது பாக்., அதிகாரிகளுடன் பேசிய யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் பேசிய யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது கூட அந்நாட்டு உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யு டியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.சமீபத்தில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவரை உளவு பார்த்ததாக இந்தியா வெளியேற்றியது. அவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் பழக்கம் இருந்தது. ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் செல்வதற்கு டேனிஷ் உதவியுடன் கடந்த ஆண்டு விசா பெற்றார்.பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி, பரூக்காபாத் ஆகிய இடங்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா சென்றார். டேனிஷ் உதவியால், ஜோதி மல்ஹோத்ரா வி.ஐ.பி.,யை போன்று பாகிஸ்தானில் நடத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு, 2024 ஏப்ரலில் சென்று திரும்பிய இவர், அதே ஆண்டு ஜூன் மாதம் சீனாவுக்கு பயணித்தார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டார். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஜோதி மல்ஹோத்ராவை ஹரியானா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரின் அனைத்து மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்து, ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா கைது பற்றி நேற்று ஹிசார் மாவட்ட எஸ்.பி., செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:மத்திய உளவு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நாங்கள் ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்தோம். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள், சில சமூக வலைதள பிரபலங்களை தங்கள் நாட்டுக்காக பணிசெய்ய வைக்க முயற்சிக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்தி தங்களுடைய கருத்துகளை பரப்புகின்றனர்.ஜோதியின் வருமானமும், அவர் மேற்கொண்ட பயண செலவுகளும் முரணாக உள்ளன. ஜோதி மல்ஹோத்ரா, 2023 முதல் பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். இதற்காக, அவருக்கு பண உதவி வழங்கப்பட்டிருக்கலாம்.பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா- - பாகிஸ்தான் மோதல் நடந்த சமயத்திலும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன், ஜோதி தொடர்பில் இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.போலீசாரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா மறுத்தார். அவர் கூறுகையில், “என் மகள் எந்த தவறும் செய்யவில்லை என்று என்னிடம் கூறினார். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

ஒடிஷா யு டியூபரிடமும் விசாரணை!

ஜோதி மல்ஹோத்ரா சில மாதங்களுக்கு முன் ஒடிஷாவுக்கு பயணம் செய்தார். அவருடன் புரியைச் சேர்ந்த பெண்ணும் பயணித்தார். அந்த பெண், தனியாக ஒரு யு டியூப் சேனல் நடத்துகிறார். ஜோதி மல்ஹோத்ராவைச் சந்தித்த பின், அந்த பெண்ணும் பாகிஸ்தானுக்கு சென்றார். இந்த தகவலை, ஹரியானா போலீசார் ஒடிசா போலீசாருக்கு வழங்கினர். அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ramesh
மே 20, 2025 13:00

இவளை தவிர சீக்கியர் ஒருவனும் சிக்கி இருக்கிறான் . எல்லாம் பணத்தாசையால் நடக்கும் தேச துரோகம்


ramesh
மே 20, 2025 12:42

இந்து பெண் முஸ்லீம் நாட்டின் உளவாளி


Varuvel Devadas
மே 19, 2025 15:48

She should be punished mercilessly if she is found guilty. National traitors should not be allowed to live in this country, no matter who they are.


Sekar
மே 19, 2025 15:29

இவர் குற்றம் செய்தவர் என்பது உண்மையானால், இது போன்ற தேச துரோகம் செய்ய எவருக்கும் துணிச்சல் வராத வண்ணம் மிக கடுமையான அதிகபட்ச தண்டனை கொடுக்க படவேண்டும். இவர் மற்றும் இவர் குடும்பத்தினர் சொத்துக்கள் முழுவதுமாக பறிமுதல்செய்ய வேண்டும். இவர் குடும்பத்தினர் தனிமை படுத்த அல்லது நாடு கடத்த படவேண்டும்.


V Venkatachalam
மே 19, 2025 14:00

இன்னும் ஏன் உயிரோடு வைத்திருக்கிறார்கள். இந்தியாவை போல மென்மையான பிரதேசம் எங்குமே இல்லை.என்ன தகிடு தத்தம் பண்ணினாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் பார்லிமென்ட் ல் இந்தியர்கள் பற்றி சொன்னது இன்றளவும் உண்மையாக இருக்கிறது.


rajan
மே 19, 2025 13:55

ஜோதி மல்ஹோத்ரா ஒரு முஸ்லிமா இந்துவா தேச துரோகி எந்த மதத்தை சார்ந்தவர் என்று யோசிக்க வேண்டியது சங்கிகளே


sridhar
மே 19, 2025 12:03

ஹரியானா ஆம்னிபஸ்


Rathna
மே 19, 2025 11:52

1970 களின் சோவியத்தின் KGB நடத்திய honeytrap போல - ரோல் மாற்றி ஆண்களை வைத்து பெண்களை வளைப்பது, அவர்களை நாட்டிற்கு எதிராக உளவு பார்க்க வைப்பது இதுதான் இந்த பெண்ணின் கதை.


MaRan
மே 19, 2025 11:06

முழுமையான விசாரணை செய்து உண்மை என்றால் பாகுபாடு இன்றி தக்க தண்டனை வழங்க வேண்டும்....வாழ்க பாரத மணி thirunaadu


Bahurudeen Ali Ahamed
மே 19, 2025 10:53

இதுபோன்ற காரியத்தில் ஒரு இஸ்லாமிய பெயர் வந்திருந்தால் ஒட்டுமொத்த சங்கிகளும் வந்து இரத்தத்தில் ஊறியது துரோகம் என்று தெலுங்கு சப்டைட்டில் வைத்து கும்மியடித்திருப்பார்கள் இப்பொழுது நான் சொல்கிறேன் ஜோதி மல்ஹோத்ரா போன்றவர்களின் இரத்தத்தில் ஊறியது தேச துரோகம் இந்த ஒரு பெண் மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு ஒற்றுவேலை பார்த்து மாட்டியவர்களில் அதிகபட்சமான பேர் இஸ்லாமியர்கள் இல்லை அதற்காக அவர்கள் சார்ந்த சமூகத்தை கேவலமாக பேச மாட்டேன் ஒரு தனிநபரின் குற்றம் அவனை மட்டுமே சாரும் இதுபோன்ற தேசத்துரோகிகளுக்கு அவன் அல்லது அவள் எந்த மதத்தை சார்ந்தவனாகளாக இருந்தாலும் தீர விசாரித்து கடுமையான தண்டனை தரப்படவேண்டும்


ponssasi
மே 19, 2025 12:17

இங்கும் ஒருசில பணத்தாசை பிடித்தவர்களால் தான் இப்படி நடக்கிறது அதற்காக ஒட்டுமொத்த இந்துக்களும் குற்றவாளி என சொல்ல முடியுமா? தவறு செய்தது யார் என மட்டும் பாருங்கள் அதற்கு இனம் மதம் மொழி எதுவும் இல்லை. இந்துவாக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.


Bahurudeen Ali Ahamed
மே 19, 2025 13:58

சகோ பொன் சசி அவர்களே உங்களுடைய கருத்தை நானும் ஏற்கிறேன் குற்றவாளிகளை குற்றவாளிகளாய் மட்டும் பார்க்காமல் சிலபேர் வன்மத்தை கக்குகிறார்கள் குற்றவாளி ஹிந்து பெயருடையவராய் இருந்தால் அந்த குற்றவாளிக்கு தண்டனை தரவேண்டும் என்று கூறுபவர்கள் அதே குற்றவாளி முஸ்லீம் பெயருடையவனாக இருந்துவிட்டால் இவர்கள் சமூகமே இப்படிப்பட்டவர்கள்தான் என்று ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் வன்மம் கக்குவார்கள் குற்றவாளி எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் அந்த குற்றத்திற்கேற்ப தண்டனை அளிக்கப்படவேண்டும்


ஈசன்
மே 19, 2025 20:22

ரொம்ப பெருமை பட்டு கொள்ள வேண்டாம் ahmed sir. பணத்திற்கு ஆசைப்பட்டு தேச துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.


ramesh
மே 20, 2025 12:48

நீங்கள் சொல்லுவது சரி.


புதிய வீடியோ