உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்

1 ஜி.,யில் தொடங்கிய கம்பியில்லா தொழில்நுட்பம் தற்போது 4 ஜி., வரை வளர்ந்துள்ளது. நாள்தோறும் பல்வேறு கருவிகளும், புதிய உபகரணங்களும் அறிமுகமாகின்றன. இந்த துறைக்கு மனிதவள தேவையும், ஆசிரியர் தேவையும் அதிகரித்தவாறு உள்ளது. இதனால் டில்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் டிஜிட்டல் வயர்லெஸ் கம்யூனிகேஷனில் எம்.டெக்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் சேர பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை நிறைவு செய்ய வேண்டும். இதற்கான காலம் 2 ஆண்டுகள். இதற்கான கட்டணம் ஆண்டுக்கு 43 ஆயிரம் ரூபாய். படித்து முடித்த மாணவர்களுக்கு தொடக்க சம்பளமாகமாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சிக்னல் புராசசிங், ஹார்ட்வேர் டிசைன், செக்யூரிட்டி ஆஸ்பெக்ட்ஸ், ஆட்ஹாக் அண்டு சென்சார் பேஸ்டு சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன் நெட்வொர்க்ஸ் ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். படித்து முடித்த மாணவர்கள் மொபைல் துறையிலோ, ஆசிரியராகவோ, ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையிலோ வேலைவாய்ப்புகளை பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !