ஏற்றுமதி, இறக்குமதி வணிகம்
இதனால் இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகம். அயல்நாட்டு வணிக மேம்பாட்டு மையம், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஆறு மாத சர்டிபிகேட் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் படிப்பாக இது வழங்கப்படுகிறது. இதில் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறை, நிதி, விற்பனை, சர்வதேச வணிகச்சட்டம், வணிக மேம்பாடு, ஆவண நடைமுறை ஆகிய பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. வகுப்பறை பயிற்சி, கேஸ் ஸ்டடி போன்றவையும் இந்த படிப்பில் வழங்கப்படுகிறது. வணிகத்தில் சிறப்பான நிலையை அடைய தேவையான பயிற்சிகளில் மட்டுமே இதில் கற்றுத்தரப்படுகிறது. இது ஆறு மாத கால படிப்பு. இதற்கான கட்டணம் 25 ஆயிரத்து 500 ரூபாய். பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். படித்து முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்கள், சர்வதேச சட்ட நிறுவனங்கள் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குகின்றன. இது தொடர்பான விவரங்களை www.ftdcindia.org என்ற வெப்சைட்டில் பெற முடியும்.