உள்ளூர் செய்திகள்

ஆடிட்டர்களை உருவாக்கும் ஐ.சி.ஏ.ஐ.,

இது இந்தியாவில் சார்ட்டட் அக்கவுன்டன்சியை முறைப்படுத்த 1949ல் தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட 60 ஆண்டுகளில் கல்வி மற்றும் தொழில் சார்ந்த அக்கவுன்டிங், ஆடிட்டிங் துறைகளில் உயர்வான இடத்தை பெற்றுள்ளது. அக்கவுன்டிங் துறையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஐ.சி.ஏ.ஐ., உள்ளது. ஐ.சி.ஏ.ஐ., நிர்வாக கவுன்சிலில் 32 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், 8 நியமன உறுப்பினர்களும் உள்ளனர். நியமன உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். இதன் தலைமையகம் டில்லியில் அமைந்துள்ளது. இது தவிர இதன் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கோல்கட்டா, கான்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு பல்வேறு நகரங்களில் 117 கிளைகள் உள்ளன. இந்தியாவுக்கு வெளியே அபுதாபி, பக்ரைன், போஸ்வானா, தோகா, துபாய், இந்தோனேஷியா, ஜெட்டா, குவைத், லண்டன், மெல்போர்ன், மஸ்கட், நைரோபி, நியூயார்க், நைஜீரியா, ரியாத், சவுதி அரேபியா, சிட்னி, டொரான்டோ, ஜாம்பியா, போர்ட் மாரிஸ்பி ஆகிய இடங்களிலும் இதற்கு மையங்கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் சர்டிபிகேட் படிப்புகள் - மாஸ்டர் இன் பிசினஸ் பைனான்ஸ்- கார்பரேட் கவர்னன்ஸ்- இன்டர்நேஷனல் டாக்சேஷன்- பாரன்சிக் அக்கவுன்டிங் அண்டு பிராட் டிடெக்ஷன் யூசிங் ஐ.டி., அண்டு காட்- இன்டர்நேஷனல் பினான்ஷியல் ரிபோர்டிங் ஸ்டான்டர்ட்ஸ்- பாரக்ஸ் அண்டு டிரஷரி மேனேஜ்மென்ட்- டெரிவேட்டிவ்ஸ்- வேல்யூவேஷன்- ஆர்பிட்ரேஷன் இது தவிர- இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்- சி.பி.இ., கோர்ஸ் ஆன் கம்ப்யூட்டர்அக்கவுன்டிங் அண்டு ஆடிட்டிங் டெக்னிக்ஸ்- இன்சூரன்ஸ் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட்- மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்சி கோர்ஸ்- கார்ப்பரேட் மேனேஜ்மென்ட் கோர்ஸ்- டேக்ஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ்- இன்டர்நேஷனல் டிரேட் லாஸ் அண்டு வேர்ல்டு டிரேட் ஆர்கனைசேஷன் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சார்டட் அக்கவுன்டன்டாக செயல்பட முடியும். இதற்காக மூன்று தேர்வுகளை நடத்துகிறது. - காமன் புரபிஷியன்சி டெஸ்ட்- இன்டகிரேடட் புரபுஷனல் காம்பிடென்சி கோர்ஸ்- ஐ.பி.சி.சி., இறுதி தேர்வுஇந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் ஐ.சி.ஏ.ஐ., உறுப்பினர்களாகி ஆடிட்டிங் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !