ஆன்லைனில் வெளிநாட்டு மொழிகள்
அங்கிருக்கும் நிறுவனங்களிலும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் உச்சரிப்பு குறைபாடுகளை கண்டுகொள்வதில்லை. மும்பையை சேர்ந்த குருகுல் ஆன்லைன் லேர்னிங் அகாடமி ஆன்லைனில் மொழிப்பாடங்களை வழங்குகிறது. வகுப்புகளுக்கு சென்று படிக்க பலர்நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிலருக்கு தினமும் வகுப்புகளுக்கு செல்ல போதுமான நேரமும் இருப்பதில்லை. பி.பி.ஓ., எல்.பி.ஓ., ஐ.டி., சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களும், வணிக நடைமுறையில் ஆங்கிலத்தை பயன்படுத்தாத நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த படிப்புகள் உதவும். இந்த படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் தொழில்நுட்பம், இன்ஜினியரிங் நிலைகளிலோ, டி-வி, ரேடியோவில் வர்ணனையாளர்களாகவோ, மொழிபெயர்ப்பாளர், ஆசிரியராகவோ, டிராவல் அண்டு டூரிசம் துறையிலோ பணியாற்ற முடியும். இங்கு கம்ப்ளீட் பிகினர் நிலை முதல் பிசினஸ் பிளஸ் பிளஸ் நிலை வரை ஒன்பது நிலைகளாக படிப்புகள் வழங்கப்படுகிறது. ஒரு மொழியை முழுமையாக கற்க 2 ஆயிரம் மணி நேரம் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2 நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த மூன்று மாத படிப்புக்கு கட்டணமாக 3 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மொழிகளை கற்கும் மாணவர்கள் பல லட்ச ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.