மாணவர்களின் மன உளைச்சல்
தற்போது, அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாவது மாணவர்கள் தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை பலவிதமான இன்னல்களை சந்திக்கும் அவர்கள் அதை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் மனதுக்குள் வைத்து அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது. கவுன்சிலிங் என்பது தீர்வுக்கான வழிமுறைகளை தெரியப்படுத்துவதே கவுன்சிலிங் ஆகும். அதற்காக மனம் விட்டு பேச வேண்டும். பிரச்னைக்கான தீர்வை சொல்வது கவுன்சிலிங் ஆகாது. கூட்டுக் குடும்பம் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் இடமாகும். ஏனெனில் அந்த சூழலில் வாழும் குழந்தைகள் பல பிரச்னைகளை சந்தித்து மனத்தெளிவு பெற்றிருப்பார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெரிதும் ஆளாகின்றனர். காரணம், யாரிடம் பிரச்னைகளை பகிர்வது என்ற குழப்பத்தில் அவர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்கு கட்டாயமாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சிறந்த கவுன்சிலர்களை தேர்வு செய்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வருகிறது. மாணவர்களும் எவ்வித தயக்கமும் இன்றி ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். கவுன்சிலிங் அளிப்பவர்கள் மாணவர்களின் குறையை முழுமையாக கேட்டு பின்னர் உரிய ஆலோசனை அளிக்க வேண்டும். முன்னதாகவே பதில்களை தயார் செய்து வைத்திருக்க கூடாது. இவர்களின் மிக முக்கியமான ஒழுக்கப்பண்பு என்பது நம்பகத்தன்மையாகும். மாணவர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் கூறும் போது அதை காப்பாற்றும் தன்மை பெற்றவராய் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பவர்கள் ஆசிரியர்களாக இருக்க கூடாது. ஏனெனில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தொடர்புமிகவும் குறைவு மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் அறிவுரை மட்டும் தான் பெற முடியும். அதனால் வியத்தகு மாற்றங்கள் எதும் நடக்காது. மாணவர்கள் கல்வி , எதிர்கால வாழ்க்கை, தனிப்பட்ட விஷயங்கள் போன்ற-வற்றை கவுன்சிலிங்கின் போது எடுத்துரைப்பார்கள். சில மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த இயலாமை, உறவுகள் சார்ந்த பிரச்னை, மது, போதை மருந்து ஒழிப்பு ஆகியவற்றிற்கு தீர்வு காண கவுன்சிலிங்கை நாடு வர். மேலும் சிலர் உடல்நலம் பற்றியும் ஆலோசிப்பார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நேரத்தை கையாளுதல் , ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படி போன்றவற்றை விவாதிப்பர். மாணவர்கள் பருவமடைந்த பின்னர் மனஅழுத்தமும், மன கிளர்ச்சியும் அதிகரிக்கும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், படிப்பில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தங்களாலும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான ஆசிரியர், பெற்றோர் சந்திப்பு மாணவர்களின் நலனை உயர்த்த பெரிதும் உதவும். கல்விக்கூடங்கள் மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். தகுந்த இடைவெளியில் சிறந்த வல்லுனர்களை கொண்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்ய வேண்டும். பெற்றோர் மாணவர்கள் மனம் நோகும்படி பேசாமல் மெதுவாகவும், தீர்வு காணும் வகையிலும் பேச வேண்டும். ஏனெனில், பெற்றோரின் கண்டிப்பால் பல மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்போது ஆன்லைன் கவுன்சி-லிங்கை சில நிறுவனங்கள் தொடங்கியுள்ளது. கவுன்சிலிங்கின் மூலம் மாணவர்கள் தங்கள் தனிப்பட்டஆளுமையையும், திறமையையும் உயர்த்தி சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம்.