வெளிநாட்டு மொழிப் படிப்புகள்
இன்றைய நவீன உலகமயமாக்கலின் தாக்கத்தால் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய கிளையை தொடங்கியுள்ளனர். மேலும் சில நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் தங்களுக்குத் தேவையான பணிகளை இந்தியாவிலுள்ள நிறுவனங்களிமிருந்து பெற்றுக் கொள்கின்றன. இதனால் வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாகிறது. இதன் மூலம் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டு மொழி படிப்புகள் இதற்கான படிப்புகளை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த பின் மூன்று வருட பட்டப்படிப்பாகவும் அல்லது 5 வருட பட்டப்படிப்பாகக் கூட படிக்கலாம். சில பல்கலைக் கழகங்கள் இதற்கான படிப்புகளை நடத்துகின்றன. மேலும் சில பல்கலைக் கழகங்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் படிப்புகளைக் கூட வழங்குகின்றன. வெளிநாட்டு மொழிகளும் அதற்கான கல்வி நிறுவனங்களும்: * அர்மேனியன்: - கோல்கட்டா பல்கலைக் கழகம், கோல்கட்டா. * பல்கேரியன்: - டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி. * சீனம்: - மும்பை பல்கலைக்கழகம், மும்பை; பனாரஸ் பல்கலைக்கழம். புதுடில்லி; கோவா பல்கலைக்கழகம், கோவா; ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத்; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி; மணிப்பூர் பல்கலைக்கழகம், இம்பால் - பி.ஏ., உத்கல் பல்கலைக்கழகம், புவனேஷ்வரம் - டிப்ளமோ படிப்பு. * செக்கோஸ்லோவாகியன்: - டில்லி பல்கலைக்கழகம். சான்றிதழ் படிப்பு. * பிரெஞ்சு: - கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சி; சென்னை பல்கலைக்கழகம்; மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்; பெங்களூரு பல்கலைக்கழகம்; ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம். * ஜெர்மன்: - சென்னை பல்கலைக்கழகம்; மதுரை காமராஜ் பல்கலைக்கழகம். கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி. * கிரீக்: - கோல்கட்டா பல்கலைக்கழகம், கவுகாத்தி பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம். * ஹெவுசா: - டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி. * ஹங்கேரியன்: - டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி. * இந்தோனேஷியன்: - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி. * இத்தாலியன்: - சென்னை பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி; மணிப்பூர் பல்கலைக்கழகம், இம்பால். * ஜப்பானீஸ்: - கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சி; ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம்; ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி. * லத்தீன்: - கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்; மும்பை பல்கலைக்கழகம்; நாக்பூர் பல்கலைக்கழகம், நாக்பூர்; லலித் நாராயன் மிதிலா பல்கலைக்கழகம், தர்பங்கா. * மங்கோலியன்: - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி. * போர்த்துக்கீசியம்: - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி - டிப்ளமோ மும்பை பல்கலைக்கழகம், மும்பை - பி.ஏ., மற்றும் எம்.ஏ., * பஷ்டூ: - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி - டிப்ளமோ மற்றும் சான்றிதழ். * ரஷ்யன்: - மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்; வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர்; அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார்; மகாத்மா காந்தி காசி வித்யாபித், வாரனாசி; புனே பல்கலைக்கழகம், புனே. * ஸ்பானீஷ்: - சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப் இங்கிலீஷ் அண்டு பாரின் லாங்குவேஜ் , ஐதராபாத், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி. * தாய்: - திப்ருகார் பல்கலைக்கழகம், திப்ருகார். * திபத்தியன்: - அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்; மேற்கு வங்கம் பல்கலைக்கழகம்; லக்னோ பல்கலைக்கழகம்,லக்னோ; * துர்கிஷ்: - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார். வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு மொழிகளை படித்து பட்டம் பெற்ற பின் உங்களுக்கு கீழ்கண்ட துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. போக்குவரத்து, சுற்றுலாத் துறை,பொழுதுபோக்கு, பப்ளிக் ரிலேஷன், மாஸ் கம்யுனிகேஷன்ஸ், சர்வதேச அமைப்புகள், தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள், விமானத்துறை அலுவலகங்கள், ஹோட்டல் நிறுவனங்கள், கண்காட்சி மற்றும் பொருட்காட்சி , ஏற்றுமதி அலுவலகங்கள், பயிற்றுவித்தல், ரேடியோ ஸ்டேஷன்ஸ் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவைகளில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.