உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்

15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பன்னாட்டுத் தரத்திலான பல்கலைக்கழகங்களை நாம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் கூட 10 ஆண்டுகளில் இவற்றை செயல்பட வைப்பது கனவாகவே இருக்கிறது என்று சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு பொருளாதார மாநாட்டில் கருத்துத் தெரிவித்துள்ளார். வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்கள் உயர் கல்வியை நாடி கல்வி நிறுவனங்களை அணுகுகின்றனர். ஆனால் போதிய அளவில் இவை இல்லை. இதை ஏற்படுத்த ஏராளமான முதலீடு தேவைப்படுகிறது. இதை தனியார் நிறுவனங்கள் தான் தந்து கல்வி மேம்பாட்டில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் இதே முறை பின்பற்றப்படுவதால் அங்கே கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வி மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவில் பல ஆண்டுகளாக நமது கல்வி நிறுவனங்கள் தான் நம் சொத்தாக விளங்குகின்றன. நமது நிறுவனங்களில் படிப்பை முடிப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். இது போலவே நமது சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சர்வதேச அளவில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவில் பட்டப்படிப்பு முடிப்பவர்களில் 12.6 சதவீதத்தினர் மட்டுமே திறன் தொடர்பான மேற்படிப்புக்குச் செல்கின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 60 சதவீதமாகவும் நமது அண்டை நாடான சீனாவில் 23 சதவீதமாகவும் உள்ளது. இந்திய கல்வித் துறையில் திறன் கொண்ட பேராசிரியர்களுக்கு இன்னமும் கூடுதலான சம்பளம் தர வேண்டும். அது போலவே வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கே செயல்பட அனுமதிக்கப்படுவதும் அவசியத் தேவையாக விளங்குகிறது. அப்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே செயல்பட அனுமதிக்கப்படும்போது அவற்றை கண்காணிக்கவும் தரத்தை மேம்படுத்தவும் புதிய அமைப்பு ஒன்று நிறுவப்படவுள்ளதாகவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !