இணையதளங்களில் இந்திய மொழி
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் பலர் கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் இருப்பதற்கு மொழிபிரச்னைதான் காரணம் என்பதை தெரிந்து கொண்டனர். ஆகவே, இணையதளங்களில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளின் தேவை நிறுவனங்களால் உணரப் பட்டது. ஆகவே இந்திய மொழிகளில் இணைய தளங்களும் மென்பொருட்களும் வரத் தொடங்கின. கூகுள் நிறுவனம் 13 இந்திய மொழிகளில் தனது தகவல்களை திரட்டி வெளியிட்டு வருகிறது. இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு முக்கிய மொழிகளாக இடம்பெற்றுள்ளன. இது தவிர வங்கம்,குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, தமிழ்,தெலுங்கு மொழிகளில் டிரான்ஸ்லிட்ரேஷன் மென்பொருளை வழங்குகிறது. ஆங்கில எழுத்துக்களை டைப் செய்து, பிராந்தி மொழி எழுத்துருக்களை பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர இந்திமொழி உள்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புப் பகுதியும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இணையதளங்களில் நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு பிராந்திய மொழிகளின் மென்பொருள் புரட்சி வரப்பிரசாதமாக அமைந்தது. இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மென் பொருட்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள் இந்தி மொழி பேசும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தங்களுக்கு தேவையானதகவல்களை இன்டர்நெட் வழியாக எளிதில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இவர்கள் பெற்றுள்ளனர். தேவைப்படும் தகவல்களை சிரமம் இல்லாமல் புள்ளிவிபரங்களுடன் பெற்று கட்டுரைகளை எழுதும் வாய்ப்பினை பத்திரிகையாளர்கள் பெற்றுள்ளனர். இந்திய மொழிகளில் தங்கள் மென்பொருட்களை மாற்றியமைத்து மக்கள் மனதில் இப்போது பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் இடம்பெற்று வருகின்றன.முதலிடத்தில் பெங்களூரு ஐ.ஐ.எம்., பிரபல பிரெஞ்சு கன்சல்டிங் நிறுவனமான எஸ்.எம்.பி.ஜி., சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வின் படி இந்தியாவிலுள்ள பிசினஸ் பள்ளிகளில் சிறந்ததாக பெங்களூருவிலுள்ள ஐ.ஐ.எம்., தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக பெங்களூரு ஐ.ஐ.எம்., இந்த விருதைப் பெறுகிறது. உலகின் தலைசிறந்த 100 பிசினஸ் கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் தரமிடப்பட்டன. இதில் இந்தியாவில் முதலிடத்தை பெங்களூரு ஐ.ஐ.எம்., பெற்றது. தரச் சான்றிதழ் பெறுவது, உறுப்பினர் எண்ணிக்கை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரப் பட்டியலில் இடம் பெறுவது போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரமிடப்படல் மேற்கொள்ளப்பட்டது.