உள்ளூர் செய்திகள்

கிராமப் பகுதிகளில் உயர்கல்வி வளர்ச்சி ஒரு புதிய முயற்சி

இந்த முயற்சிகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள், பிற்பட்ட பகுதிகள், எல்லைப்பகுதிகள் போன்றவை பின் தங்கி விடக் கூடாது என்னும் எண்ணத்தில் பிரத்யேகமான புதிய முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு வளர்ச்சி நிதி அளித்திடும் திட்டத்தை யு.ஜி.சி., செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் புதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டங்கள் கையாளப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாடகை அடிப்படையில், தங்கும் வசதிகள் செய்து தரப்படவுள்ளன. இதோடு சார்ந்திருக்கும் பகுதிக்குப் பொருத்தமான பாடப் பகுதிகள், ஏழை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவது போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ம.பி., மாநிலத்திலுள்ள அமர்கன்டாக்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்திராகாந்தி பழங்குடியின திறந்தவெளி பல்கலைக்கழகம் உயர்கல்வியை பழங்குடியின மக்களிடம் கொண்டு செல்வதை உத்வேகமாகக் கொண்டு இயங்குகிறது. தொலைநிலைக் கல்வியில் தரக்கட்டுப்பாட்டுடன் பழங்குடியினப் பகுதி உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டு வரும் இக்னோ கல்வித் துறையில் ஏற்கனவே முத்திரை பதித்து வருவதை அறிவோம். தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பத்தின் வாயிலாக தேசியக் கல்வி இலக்கு (என்.எம்.இ.,)அமைப்பானது உயர்கல்வித் துறையில் எங்கும் எப்போதும் கிடைக்கும் கல்வியை உயர்கல்வித் துறையில் சாத்தியமாக்கியுள்ளது. இது தவிர உயர் கல்வியில் தேசிய இணைப்பு விகிதத்தை விடக் குறைவான விகிதம் கொண்ட நாட்டிலுள்ள 374 பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பட்டப்படிப்புக் கல்லூரிகளை நிறுவும் புதிய திட்டத்தை அமல்படுத்த 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியுதவியைத்தரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !