அமெரிக்க கல்வி கண்காட்சி
அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான 'எஜுகேஷன் யு.எஸ்.ஏ.,' இந்தியாவின் பிரதான 8 நகரங்களில் கல்வி கண்காட்சியை நடத்துகின்றன.அறிமுகம்'எஜுகேஷன் யு.எஸ்.ஏ.,' 175க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 430க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களைக் கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் அமைப்பு. இந்தியாவில், டில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மையங்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு, அமெரிக்க உயர்கல்வி குறித்த விரிவான தகவல்களை இந்த மையங்கள் வழங்குகின்றன.கல்வி கண்காட்சிஅமெரிக்க கல்வி கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளைச் சந்தித்து நேரடியாக தகவல்களை பெறலாம்.அமெரிக்காவில் உள்ள படிப்புகள், விண்ணப்ப செயல்முறைகள், உதவித்தொகைகள், தகுதி மற்றும் கல்லூரி வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய நிபுணர்கள் தலைமையிலான அமர்வுகளும் இடம்பெறுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் முதல் கலை, வணிகம் மற்றும் பல துறைகள் என இந்த நிகழ்வுகள் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் உயர்கல்வி தகவல்களை வழங்குகின்றன.கண்காட்சி அட்டவணை:ஆகஸ்ட் 9: சென்னையில் ஹோட்டல் ஹில்டன், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஆகஸ்ட் 10: பெங்களூருவில் ஹோட்டல் ஹயாட் சென்ட்ரிக் ஹெப்பால், பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஆகஸ்ட் 11: ஹைதராபாத்தில் ஹோட்டல் ஐடிசி கோஹினூர், பிற்பகல் 4:30 மணி முதல் மாலை 7:30 மணி வரைஆகஸ்ட் 12: புது தில்லியில் ஹோட்டல் தி லலித், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைஆகஸ்ட் 13: கொல்கத்தாவில் ஹோட்டல் தி பார்க், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைஆகஸ்ட் 15: அகமதாபாத்தில் ஹோட்டல் ஹயாட் வஸ்த்ரபூர், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஆகஸ்ட் 16: மும்பையில் ஹோட்டல் செயிண்ட் ரெஜிஸ், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஆகஸ்ட் 17: புனேவில் ஹோட்டல் ஷெரட்டன் கிராண்ட் புனே பண்ட் கார்டன், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணிபதிவு செய்யும் முறை: https://bit.ly/EdUSAFair25EMB எனும் இணைய பக்கம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.விபரங்களுக்கு: www.educationusa.in