உள்ளூர் செய்திகள்

சைபர் பாதுகாப்பு

இணைய தாக்குதலில் இருந்து இணையவெளிகளை (சைபர் ஸ்பேஸ்) பாதுகாக்கும் செயல்முறையையே சைபர் பாதுகாப்பு எனப்படுகிறது. இணையவெளியில் நமது தரவுகள், தகவல்கள், சேமிப்பு ஆதாரங்கள், கிளவுட் சேவை, நெட்வொர்க் சாதனம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் இணையதளத்தை பாதுகாப்பதே சைபர் பாதுகாப்பின் முக்கியப் பணி.இணைய தாக்குதல்இணைய தாக்குதல் என்பது இணைய வழியாக தாக்கப்படுவது. கைப்பேசி, கணினி, பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஸ்பேமர்ஸ், ஹேக்கர்ஸ் உள்ளிட்டவர்கள் ஒருவருடைய தரவுகளையோ, தனிப்பட்ட தகவல்களையோ, பணத்தையோ திருட சட்டவிரோத தாக்குதல்களை நடத்துகிறார்கள்.இணைய தாக்குதல் வகைகள்*மால்வேர்*பிஷ்ஷிங்*பாஸ்வேர்டு தாக்குதல்*டிடிஓஎஸ்*மேன் இன் த மிடில்*டிரைவ் பை டவுன் லோட்ஸ்*மால்வர்டைசிங்*ரோக் சாப்ட்வேர்சைபர் பாதுகாப்பு வகைகள்*எண்ட் பாய்ண்ட் பாதுகாப்புஇரண்டு சாதனங்களுக்கு இடையே உள்ள இறுதி புள்ளிகளை பாதுகாப்பது அவசியம். ஏனென்றால், இந்த இடங்களில் தரவுகளை 'ஹேக்' செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. 'எண்ட் பாய்ண்ட்' பாதுகாப்பு சாதனத்திற்கும், நெட்வொர்க்கிற்கும் இடையிலான இணைப்பைப் பாதுகாக்கிறது.*தரவு பாதுகாப்புதரவுகளை சேமித்து வைக்கும்போதும், பரிமாற்றம் செய்யும் போதும் மிக கவனமாக அதனை பாதுக்காப்பது அவசியம். இதுவே தரவு பாதுகாப்பு எனப்படும்.*அப்ளிகேஷன் பாதுகாப்புஒருவர் பற்றிய தகவல்களை பாதுகாப்பது அப்ளிகேஷன் பாதுகாப்பு எனப்படும். உதாரணத்திற்கு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பெயர், முகவரி, கைப்பேசி எண், உடல் பிரச்சனைகள் குறித்த தகவல்களை பாதுகாக்க அப்ளிகேஷன் பாதுகாப்பு பயன்படுத்தப்படுகிறது.*நெட்வொர்க் பாதுகாப்புஒரு நிறுவனத்தின் நெட்வொர்க்குகளைப் பாதுகாக்கிறது மற்றும் நெட்வொர்க்கின் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கிறது. ஒரு நிறுவனத்தில் சேகரிக்கப்படுகின்ற தகவல்களை மிகவும் பாதுகாப்பாக, அதே நிறுவனத்தின் மற்றொரு இடத்தில் இருந்து அணுகுவதே நெட்வொர்க் பாதுகாப்பு எனப்படுகிறது.*பெரிமீட்டர் பாய்ண்ட் பாதுகாப்புஒரு அலுவலகத்தின் தரவுகளை பாதுகாத்தல், அலுவலகத்தில் உள்ள அனைத்து சாதனங்களை பாதுகாத்தல் என ஒட்டுமொத்த அலுவலகத்தின் தகவல்கள் வெளியே கசியாமல் பாதுகாப்பதே பெரிமீட்டர் பாய்ண்ட் பாதுகாப்பு எனப்படும். இது ஒட்டுமொத்தமாக வணிகத்தின் டிஜிட்டல் பாதுகாப்பு முறைகளைப் பாதுகாக்கிறது.*மனித அச்சுறுத்தல் பாதுகாப்புபிஷிங் உருவகப்படுத்துதல்கள் மற்றும் அணுகல் மேலாண்மை கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. தீங்கிழைக்கும் பிஷிங் மின்னஞ்சல் இணைப்புகளைக் கிளிக் செய்வது அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு முக்கியமான உள் தகவலை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும்.*வெப் பாதுகாப்புஇணைய பாதுகாப்பு என்பது நெட்வொர்க்குகள், சாதனங்கள், பயனர்கள் மற்றும் கணினி அமைப்புகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் செயல்முறை ஆகும்.அடுத்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் தகவல் போக்குவரத்து பத்து மடங்கு அதிகரித்துவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், சைபர் பாதுகாப்பின் அவசியமும், பயன்பாடும் அதிகரிக்கும். ஆகவே, இது குறித்த படிப்புகளும், சைபர் பாதுகாப்பு வல்லுநர்களின் தேவையும் அதிகரிக்கும் என்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !