கல்வியும், ஒழுக்கமும் இரு கண்கள்!
ஒரு தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக கே.ஐ.டி., விளங்குவதால், டிசைன் திங்கிங் மற்றும் புத்தாக்க பாடத்திட்டத்தின் அடிப்படையில் 13 இளநிலை பட்டப்படிப்புகள், 7 முதுநிலை பட்டப்படிப்புகள், 7 பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சென்டர் ஆப் எக்செலன்ஸ் மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து புரொஜக்ட் செயல்படுத்தப்படுகிறது. புத்தாக்க தொழில் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவோருக்கான சிறப்பு மையமும் இயங்குவருகிறது. வெகுவிரையாக புதுப்புது நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது. அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களுடன் உதவியுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.எது சிறந்த கல்லூரிஎன்.ஐ.ஆர்.எப்., என்.பி.ஏ., ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். நண்பர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் ஒரு பாடப்பிரிவையோ அல்ல்து கல்லூரியையோ தேர்வு செய்யக்கூடாது. எந்த ஒரு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தாலும், பிற துறை அறிவையும் வளர்த்துக்கொண்டு, அதிகமான புராஜெக்ட் செய்தால் பிரகாசமான வாய்ப்புகளை பெற முடியும். குறைந்தது ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்ளுங்கள். தொழில்முனைவோருக்கான திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.இளநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களின் வாழ்வில் 4 ஆண்டுகால கல்லூரி வாழ்க்கை மிக முக்கியமான காலகட்டம். கல்விக்கு இணையாக இன்று ஒழுக்கமும் மிக அவசியம். ஆழமான கல்வி அறிவு, ஒழுக்கம் இந்த இரண்டையும் பெற்றவர்கள் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தை பெறுவர். வாசிப்பு பழக்கம்இன்றைய காலத்தில், மிகக் குறைவான மாணவர்களே நூலகங்களை பயன்படுத்துகின்றனர். கொரனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு எழுதும் பழக்கமும் வெகுவாக குறைந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சர்வதேச ஆராய்ச்சி பத்திரிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் நூலகங்களை பயன்படுத்த வேண்டும். பாடப்பிரிவு சார்ந்த புத்தங்களுடன் தினமும் நாளிதழ்களையும் வாசிக்க வேண்டும். வாசித்தலின் வாயிலாக பொது அறிவு மட்டுமின்றி சமுதாயத்தில் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும். மேலும், எந்த ஒரு பொதுத்தேர்வையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் முடியும்.-இந்து முருகேஷன், துணைத் தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.