பாரம்பரியமான சித்த மருத்துவம்
பழங்காலத்து சித்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவத்தில், பெரும்பாலும் செடி, மரங்களின் பகுதிகளைக் கொண்டே மருந்து தயாரிக்கபடுகிறது. இந்த மருந்துகள், நோய்களை குணப்படுத்துவதுதோடு மட்டுமல்லாமல் பின் விளைவுகளையும் நீக்கிவிடுவதாக நம்பப்படுகிறது. மருந்துகளில் இலைகள், மரப்பட்டைகள், தண்டு, வேர், விதைகள் போன்றவற்றோடு உலோகங்கள், தாது உப்புகளும் கலந்திருக்கலாம். சிகிச்சை வகைகள் 1.டிவைன் முறை 2.ரேஷனல் முறை 3. சர்ஜிக்கல் முறை.மருந்துகளின் வடிவம், தயாரிக்கும் முறை, சேமித்து வைக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து, மருந்துகள் 32 வகைகளாக பிரிக்கப்படுகிறது. வழங்கப்படும் படிப்புகள் 1. பி.எஸ்.எம்.எஸ்., (சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை)2. எம்.டி., சித்தா (சிறப்பு மருத்துவம்) கல்வித் தகுதி பிளஸ் 2வில் உயிரியல், கணிதம் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் பி.எஸ். எம்.எஸ்., படிக்கலாம். பி.எஸ். எம்.எஸ்., பட்டம் பெற்றவர்கள் எம்.டி., சித்தா படிக்கலாம். கல்வி நிறுவனங்கள்இந்தியாவில் பல்வேறு கல்லுõரிகள் இப்படிப்பைவழங்குகின்றன. வேண்டிய திறமை ஒருவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணராக இருக்க வேண்டுமெனில், கவனம், தன்னம்பிக்கை , பொறுப்புணர்வு,அக்கறையாக பழகும் தன்மை, நல்ல தகவல் பரிமாற்றம், ஆலோசனை திறமைகள் போன்றவை அவசியம். வேலை வாய்ப்பு சித்த மருத்துவமனைகளில் பணியாற்றுதல், சித்த மருத்துவ கல்லுõரிகளில் ஆசிரியராக பணியாற்றுதல், தனி கிளினிக் நடத்துதல், சித்த மருத்து கடைகளை தொடங்குதல், சித்த மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றுதல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.