உள்ளூர் செய்திகள்

மியூசியாலஜி துறையின் வாய்ப்புகள்!

வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாப்பது மற்றும் பழமையை பராமரிக்கும் பணியில் ஆர்வம் கொண்டவர் நீங்கள் என்றால், மியூசியாலஜி படிப்பை தேர்வு செய்யலாம்! என்ன படிக்கலாம்?பிரசன்டேஷன் அண்ட் இன்டர்பிரிடேஷன், மியூசியத்தின் வரலாறு, மேலாண்மை, அருங்காட்சி கட்டடக்கலை, இந்திய வரலாறு மற்றும் தொல்லியல், வரலாற்று கலை, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இந்தியப் பண்பாடு, இயற்கை வரலாற்றுப் படிமங்களை பாதுகாப்பது மற்றும் பண்பாட்டு செல்வங்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றை கள பயிற்சி முறையில் படிக்கும் வாய்ப்பை பெறலாம். தகுதிகள்அறிவியல், வரலாறு, கலை, நுண்கலை அல்லது தொல்லியல் போன்ற துறைகளில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மியூசியாலஜி துறையில் எம்.ஏ., / எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம். மானிடவியல், விலங்கியல், மண்ணியல், வேளாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கடல் அறிவியல் ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், இத்துறையில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். தேவைப்படும் கூடுதல் திறன்கள்மியூசியாலஜி துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு மொழிப்புலமை அதிகம் வேண்டும். குறிப்பாக பாரசீகம், அராபிக், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தால், உங்களின் மதிப்பே தனி. பணித் தன்மைகுறிப்பிட்ட பொருட்களை சேகரிப்பது, மக்கள் தொடர்பு, மார்க்கெட்டிங், நிதி உயர்த்தும் நடவடிக்கை மற்றும் கல்விசார்ந்த பணிகள், பணியாளர் மேலாண்மை, பட்ஜெட் தயாரித்தல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இதர அருங்காட்சியகங்களுடன் இணைந்து செயல்படுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் உறவுகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ‘மியூசியாலஜிஸ்ட்’ மேற்கொள்கிறார். தேசியளவிலான கல்வி நிறுவனங்கள்புதுடில்லி நேஷனல் மியூசியம்மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகம்கொல்கத்தா பல்கலைக்கழகம்பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !