அதிகரிக்கும் கல்விக்கடன்!
கல்விக்கடனை பெற்று, உரிய நேரத்தில் திரும்ப அடைக்காத மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை தொட்டுள்ள போதிலும், கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக ஆய்வு தெரிவிக்கிறது! வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள், 2017ம் நிதியாண்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கியுள்ளன. இது, முந்தைய ஆண்டை விட 3 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதேநேரம், மொத்தம் 81 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கல்விக்கடன் இதுவரை மாணவர்களால், திரும்ப செலுத்தப்படவில்லை. கல்விக் கடன் பெறுவதில், தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. எனினும், 81 ஆயிரத்து 600 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்படாத கடனில் 24 சதவீத பங்கை, தமிழகம் மட்டும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் உயர்கல்விக்க்காக கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது!