உள்ளூர் செய்திகள்

இந்தியா மாணவர்களால் ரூ.42.5 ஆயிரம் கோடி வருமானம்!

இந்திய மாணவர்களின் பிரதான விருப்பமாக திகழும் அமெரிக்கா, 2016-17ம் கல்வி ஆண்டில், முந்தைய ஆண்டை விட 12.3 சதவீத அதிக மாணவர்களை ஈர்த்துள்ளது! சர்வதேச கல்வி மையத்தின் அறிக்கையின்படி, 2016-17 கல்வியாண்டில் மட்டும் 1.86 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாமிடம் வைக்கிறது. 3.29 லட்சம் மாணவர்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. முக்கிய துறைகள்சர்வதேச அளவில், அமெரிக்க சென்றுள்ள மாணவர்களில் 21.4 சதவீதம் பேர் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளனர். 18.6 சதவீத மாணவர்கள் வணிகம் மற்றும் மேலாண்மை துறைகளையும், 15.5 சதவீத மாணவர்கள் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளையும் தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, சமூக அறிவியல்(7.7 சதவீதம்), வாழ்க்கை அறிவியல்(7.1 சதவீதம்), நுண்கலை மற்றும் கலை(5.7 சதவீதம்), சுகாதாரப் பணிகள் தொடர்பான படிப்பு(3.2 சதவீதம்), ஆங்கிலம்(2.8 சதவீதம்), தொடர்பியல் மற்றும் பத்திரிக்கை(2 சதவீதம்), கல்வியியல்(1.7 சதவீதம்), மானுடவியல் (1.6 சதவீதம்), வேளாண்மை(1.2 சதவீதம்), சட்ட ஆய்வுகள் மற்றும் சட்ட அமலாக்கம் (1.4 சதவீதம்) ஆகிய துறைகளை தேர்வு செய்துள்ளனர். 42.5 ஆயிரம் கோடிஅமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களில், 56.3 சதவீதம் பேர் இளநிலை பட்டப் படிப்பை படிக்கின்றனர். இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு, கடந்தாண்டில் மட்டும் 42.5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது! முன்னணி கல்வி நிறுவனங்கள்வெளிநாட்டு மாணவர்களின் முதன்மை தேர்வாக நியூயார்க் பல்கலைக்கழகம் (17,326 மாணவர்கள்) திகழ்கிறது. அடுத்தடுத்த இடங்களில், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (14,327 மாணவர்கள்), கொலம்பியா பல்கலைக்கழகம் (14,096 மாணவர்கள்), நார்த் ஈஸ்டன்  பல்கலைக்கழகம் (13,201 மாணவர்கள்), அரிசோனா மாநிலம் பல்கலைக்கழகம் (13,164 மாணவர்கள்), இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் (12,454 மாணவர்கள்), கலிபோர்னியா பல்கலைக்கழகம் (12,199 மாணவர்கள்), பெர்டூ பல்கலைக்கழகம் (11,288 மாணவர்கள்), டெக்சாஸ் பல்கலைக்கழகம் (9,305 மாணவர்கள்), பென் மாநில பல்கலைக்கழகம் (9,134 மாணவர்கள்), பாஸ்டன் பல்கலைக்கழகம் (8,992 மாணவர்கள்), மிச்சிகன் பல்கலைக்கழகம் (8,163 மாணவர்கள்),  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. - ராபர்ட் பர்ஜெஸ், கான்சுல் ஜெனரல், அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !