டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
முழு நேரப் பட்டப்படிப்பை தொடர முடியாதநிலையில், வேலைக்கு சென்று கொண்டிருக்கும் டிப்ளமோ பட்டதாரிகள், பகுதிநேரமாக பி.இ., / பி.டெக்., படிப்பை தொடர வாய்ப்பினை வழங்குகிறது, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம்! இளநிலை பொறியியல் படிப்புகள் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வழங்கப்படும் படிப்புகள்: சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மேனுபேக்சர் இன்ஜினியரிங், இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங், எலட்ரிக்கல் அண்ட் எலட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பிரின்டிங் டெக்னாலஜி. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) வளாகத்தில் வழங்கப்படும் படிப்புகள்: மெக்கானிக்கல் இன்ஜினியரிங், புரொடக்சன் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி. அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள்: கெமிக்கல் இன்ஜினியரிங், லெதர் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி. கால அளவு: ஏழு செமஸ்டர்கள் வீதம், மொத்தம் 3.5 ஆண்டுகள். வகுப்பு நேரம்: மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணிவரை. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை வேலையில் வகுப்புகள் நடைபெறும். தகுதிகள்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், ஏதேனும் ஒரு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மாணவர்கள், தற்போது வேலை செய்து வரும் நிறுவனம், கல்லூரியில் இருந்து 120 கி.மீ., சுற்றளவுக்குள் இருத்தல் அவசியம். தொலைநிலைக் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது. சேர்க்கை முறை: டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின்படி ‘மெரிட்’ அடிப்படையில், ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறும். மதிப்பெண் மதிப்பீடு: டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் இரண்டும் 75:25 எனும் விகிதத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு மதிப்பிடப்படுகிறது. விபரங்களுக்கு: www.annauniv.edu