அறிவீர்களா ‘ஆல்கஹால் டெக்னாலஜி’?
இன்ஜினியரிங் துறையில், நாம் நினைத்தே பார்க்காத அளவிற்கு பல உட்பிரிவுகள் பெருகிவருகின்றன! அவற்றில் ஒன்றுதான், மதுபானம் மற்றும் சர்க்கரை பயன்பாடுகளை பற்றிய இன்ஜினியரிங் பிரிவான, ‘சுகர் அண்ட் ஆல்கஹால் டெக்னாலஜி’! முக்கியத்துவம்சர்க்கரை மற்றும் மதுபான தொழில்நுட்பம் பற்றிய இந்த படிப்பு, சர்க்கரை, மதுபான மற்றும் குளிர்பான ஆலைகளுக்கு தேவையான இன்ஜினியரிங் வழிகாட்டுதலை வழங்க உதவும். எந்த அளவிற்கு சர்க்கரையை பயன்படுத்துவது சரியானது? குறைந்த அளவில் தரம் குறையாமல் லாபம் ஈட்டுவது எப்படி? போன்ற கேள்விகளுக்கு, தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனைகளை வழங்க இந்த படிப்பு உதவுகிறது. குறிப்பாக, டிஸ்டில்லரி தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான வழிகளை கண்டறிகிறது. அல்கஹால் டெக்னாலஜியில் முன்பு, டிப்ளமோ மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படிப்பிற்கு இன்ஜினியரிங் பட்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. யார் படிக்கலாம்?12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியியல் படித்த மாணவர்கள், இந்த 4 ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். மேலும், கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, ஜே.இ.இ., அல்லது மாநில நுழைவு தேர்வுகளை எழுத வேண்டியது அவசியமாகிறது. ஒரு சில கல்லூரிகளில் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலான, நேரடி சேர்க்கையும் உள்ளது. முக்கிய கல்வி நிறுவனங்கள்இந்தியாவில், சில கல்விநிறுவனங்களில் மட்டுமே இந்த படிப்பு வழங்கப்படுகிறது. * குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அம்ரித்சர்* ராஜாராம் பாபு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மஹாராஷ்டிரா* வசந்தாதா சுகர் இன்ஸ்டிடியூட், மஹாராஷ்டிரா* நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட், கான்பூர்* கார்கி அக்ரிகல்ட்சுரல் ரிசர்ச் அண்ட் டிரைனிங் இன்ஸ்டிடியூட், மஹாராஷ்டிரா பணி வாய்ப்புகள்மதுபான நிறுவனங்களில் ‘பிரூவிங் இன்ஜினியர்’ பணி வாய்ப்பு பிரகாசம். மதுபான தொழிற்சாலைகளில் மட்டும் தான் வேலைப் பெற முடியும் என்றில்லை; சர்க்கரை ஆலை, குளிர்பான உற்பத்தி ஆலைகளிலும், தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உண்டு. எரிபொருட்கள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருவதால் சுகர் மற்றும் ஆல்கஹால் டெக்னாலஜி வழியாக எத்தனால் வடிவில் பையோ-பியூயல் தயாரிக்கச் செயல்முறை நுணுக்கங்கள் தெரிந்தவர்களுக்கான வாய்ப்புகள் இப்போது அதிகம். ‘சுகர் அண்ட் பிரூவிங் இன்ஜினியர்’, ‘கன்சல்டன்ட்’, ஆராய்ச்சியாளர், தரம் பரிசோதனை மற்றும் மேற்பார்வையாளர் போன்ற பணி வாய்ப்புகளையும் பெறலாம்.