உள்ளூர் செய்திகள்

வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியரிங்

அனைவரும் அறிந்த சிவில் இன்ஜினியரிங் துறையில் பலரும் அறியாத ஒரு பிரிவு, ‘வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியரிங்’. வாய்ப்புகளும், தேவைகளும் அதிகம் உள்ள ஒரு பொறியியல் படிப்பு இது! முக்கியத்துவம்நீர் வளத்தை மேம்படுத்துதல், அதற்கான சேகரிப்பு திட்டங்களை வகுத்தல் மற்றும் நீர் மேலாண்மை போன்றவற்றில், வல்லுநர்களை உருவாக்குகிறது, இந்த பொறியியல் படிப்பு! நீரியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், வானியல் மற்றும் இயற்கை வளம் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறை படிப்புகளும் ஒருங்கிணைந்ததே, ‘வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியரிங்’ (நீர் வள பொறியியல்). சமுதாயத்தின் அன்றாட நீர் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டங்களை வகுத்தல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய கட்டுமானம் சார்ந்த கல்வியை, இத்துறை மாணவர்கள் பெறுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக செயல்முறை பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. முக்கிய பாடங்கள்:பைப்லைன் வடிவமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு, கழிவுநீர் வடிகால் அமைப்புகள், நீர்ப் பாசன பொறியியல், ஹைட்ரோடைனமிக்ஸ் மற்றும் நீரியல். தேவைப்படும் திறன்:இந்தத் துறையானது, அறிவியலும், கணிதமும் ஒன்றிணைந்ததாகும். ஆகையால், அறிவியல் கோட்பாடுகளை கணிதம் மூலம் செயல்படுத்தும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். புதுப் புது தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மற்றும் வடிவமைப்பு திட்டங்களை வகுத்திட கணினி அறிவும் பெற்றிருப்பது அவசியம். வேலை வாய்ப்புகள்:தனியார் மற்றும் அரசுத் துறைகளில் இந்த துறைக்கான தேவை தற்போது அதிகம் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில், கிடைக்கின்ற நீரைச் சரியாக கையாள வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது என்பதால், பணி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியர், வேஸ்ட் வாட்டர் இன்ஜினியர், ஸ்ட்ரீம் ரீஸ்டோரேஷன் இன்ஜினியர் போன்ற பணி வாய்ப்புகளை பெற முடியும். பேராசிரியராகவும் பணிபுரியலாம். மேலும், சுய தொழிலாக நீரியல் ஆலோசகராகவும் செயல்படலாம். முக்கிய கல்வி நிறுவனங்கள்:* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை* இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுடில்லி* சாம் ஹிக்கின்பாதம் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சர், டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், உத்திரப்பிரதேசம்* இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், சென்னை* ஜவஹர்லால் நேரு டெக்னாலாஜிக்கல் யூனிவர்சிட்டி, ஐதராபாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !