சுதந்திரம் நிறைந்ததா கல்லூரி வாழ்க்கை?
இதுவரை பள்ளியில் பல ஆண்டுகள் கழித்த பிறகு, கல்லூரி குறித்து பல விஷயங்களை சிந்திக்கிற மற்றும் கல்லூரிக்கு செல்லத் தன்னையே தயார் செய்து கொள்கின்ற நிலையில் இளம் மாணவ, மாணவிகள் இருக்கின்ற நேரம் இது. கல்லூரி என்றாலே பல மாணவர்களுக்கு ஏராளமான சுதந்திரம் என்பதே நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளாகப் பள்ளியின் கடுமையான கற்றல் செய்முறையில் சிறை கைதி போல் இருந்ததற்குப் பிறகு, நெருக்கடி இல்லாமல் சற்றே தளர்வாகக் கற்பதற்கான ஒரு இடமாகவே கல்லூரியை பல மாணவர்கள் பார்க்கின்றனர். கல்லூரி வாழ்க்கையை எப்படி அணுகுவது மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்வது என்பது குறித்து ஏராளமான தகவலும், அனுபவ பகிர்வும், யோசனைகளும், பெற்றோர்களாலும், நலம் விரும்பிகளாலும் மற்றும் சக வயது நண்பர்களாலும் இந்நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்படுவது இயல்பானதே. தற்போதைய காலகட்டத்தில், கல்லூரியில் புது முகங்களாகச் சேர்பவர்கள் இயல்பாக உணரச்செய்ய வேண்டும் என்பதற்காகவே கல்லூரிகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. புதிய அமைவிடத்தில் தங்களது இருப்பினை சரியாக புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காகவே தகவலளிப்புக்கான சிறப்பு அமைவிடங்களையும் மற்றும் வழிகாட்டுவதற்கான குழுக்களையும் கல்லூரிகள் நிறுவி உதவ முற்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளும், சூழ்நிலைகளும் புதிதாகவே இருக்கும். நிகழும் விஷயங்கள் குறித்து நீங்கள் புரிந்துகொண்டு சவுகரியமாக உணர்வதற்கு உங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படலாம். எவ்வித முற்சார்பும், ஊகங்களும் இல்லாமலேயே சரியான நபரை அணுகி, ஐயங்களுக்கு விளக்கம் தரவும் புதிய விஷயங்களை மிக வேகமாகக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு திறந்த மனநிலையைக் கொண்டிருப்பது நிச்சயமாக உதவும்.இந்த டிஜிட்டல் யுகமானது, சமூக திறன்களைவிட டிஜிட்டல் திறன்களை அதிகமாகக் கொண்டிருக்கிற மாணவர்களையே உருவாக்கியிருக்கிறது. நேர் எதிரே மேஜையில் அமர்ந்திருக்கும் நபரிடம் உதவியை கேட்பதற்குப் பதிலாக, கூகுளில் தீர்வுகளை தேடி அறிவதையே நாம் விரும்புகிறோம்; அதுவே பழகிப்போய்விட்டது. ஒரு தனிநபரின் கண்ணோட்டமும், சிந்தனையும் ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவுசெய்வது சிரமமானதாக இருக்கின்றபோது, பிற நபர்களோடு அது குறித்து விவாதிப்பது இலட்சக்கணக்கான சாத்தியங்களை உங்களுக்குத் திறந்துவிடும். நட்பையும், தோழமையையும் மனித உறவுத் திறமைகளையும், குழுவாகப் பணியாற்றுவதையும் மற்றும் பிறரது திறன்களை மதிப்பதன் மூலம் உங்களது திறன்களையும் கடந்து செயல்படுவதற்கு உங்களையே வளர்த்துக்கொள்வதற்கு உங்களது சமூகத்திறன்களை நீங்கள் சார்ந்திருக்கும் ஒரு இடமாகக் கல்லூரி வளாகம் இருக்கும். உங்களது சிறப்பு திறன்களை வெளிப்படுத்தவும், கல்லூரிக்குள் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள சமூகத்திற்குள் ஒரு சரியான இடத்தை உங்களுக்கு பெற்றுத் தரவும் இது மிக அதிக வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும். பயிலும் பாடத்தில் ஆழமான அறிவை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று கல்லூரி எதிர்பார்க்கிறது மற்றும் படிக்க தேர்வுசெய்திருக்கும் பிரிவில் நம்பிக்கையைக் கல்லூரி வழங்குகிறது. கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் பேராசிரியர்களையும், ஆசிரியர்களையும் சந்திக்க தயங்கித் தவிர்ப்பதும் மற்றும் தங்களது ஐயங்களுக்கு அவர்களிடமிருந்து விளக்கம் பெறாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதும் மாணவர்கள் பொதுவாக செய்கிற ஒரு தவறாக இருக்கிறது. நம்பிக்கையோடு தங்களை அணுகி வருகிற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தங்களது அனுபவங்களையும், அறிவையும் பகிர்ந்துகொள்வதிலும் அந்த மாணவனை அறிவின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்ல வழிகாட்டுவதிலும் பேராசிரியர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு ஆர்வமூட்டும் சிந்தனையோ அல்லது அறிவார்ந்த யோசனைகளோ அனைத்து நிலைகளிலும் பாராட்டி ஏற்கப்படுகின்றன. இளம் திறமைசாலிகளை ஊக்குவித்து வளர்ப்பதற்குக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு கவனம் வழங்கப்படுகிறது. கல்லூரி வாழ்க்கை இளம் மாணவர்களது, மனதில் ஊக்கமூட்டி, தங்களுக்குத் தானே சென்றடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளத் தூண்டுவதன் மூலம் அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றுகிறது. மாணவர்கள் மனதில் இலக்கு நிர்ணயம் நிகழும்போது, அடைய வேண்டிய மைல்கற்களை நிர்ணியிக்குமாறு தானியக்க செயல்பாடாக அது அவர்களை முடுக்குகிறது; ஒரு பணியை செய்து முடிப்பதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கவும், நேர மேலாண்மையின் மதிப்பைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்திற்காக சுய முனைப்புள்ள மனப்பான்மையைப் பட்டை தீட்டி கூர்மையாக்கவும் இது தூண்டுகிறது. கல்லூரி வளாகமும் மற்றும் அதன் சூழலும் ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கிற ஒரு இயக்கமாக தங்களையே மாற்றிக்கொள்கிற சிந்தனைப் பொறிகளையும், ஒளிக்கீற்றுகளையும் உருவாக்க அதிகம் அவசியப்படுகிற அமைவிடத்தை பல நேரங்களில் வழங்குகிறது. பட்டைத் தீட்டப்படாத வைரமாக இருக்கும் திறனுள்ள மாணவர்களை, அவர்கள் விரும்பித் தேர்வுசெய்திருக்கும் துறையில் வல்லுநர்களாக இது வளர்க்கிறது; குடும்ப வாழ்க்கையையும், பணி வாழ்வையும் எப்படி சமநிலைப்படுத்தி சீர்ப்பட வாழ்வது என்று அறிந்திருக்கிற நல்ல பண்பாளர்களாக இது அவர்களை உருவாக்குகிறது. கல்லூரி என்பது உங்களது திறன்களை பரிசோதிக்கிற ஒரு தளமாகவும் மற்றும் நீங்கள் தேர்வு செய்திருக்கும் துறையில் உங்களுக்கான பின்புலத்தை உருவாக்கும் அமைவிடமாகவும் திகழ்கிறது. சமுதாயத்தின் நலனுக்காக ஒரு பெரிய அளவில் உங்களது கனவுகளையும், இலட்சியங்களையும் விடாமுயற்சியுடன் நிஜமாக்கி சாதிப்பதற்கான வாய்ப்பினை கல்லூரி வழங்குகிறது. கல்லூரியில் ஒரு புதுமுக மாணவராக நீங்கள் நுழையும்போது, வாய்ப்புகள் அடங்கிய சுரங்கத்தின் கதவுகளை நீங்கள் திறக்கிறீர்கள்; நம்பிக்கையோடு, விவேகத்தோடும் செயல்பட்டு வெற்றிக்கான உங்கள் சொந்த பாதையை நீங்கள் கண்டறியலாம். பேரார்வமும், விடாமுயற்சியும், உழைப்பும் உங்களுக்கு இருக்குமானால், வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமில்லை. - பேராசிரியர். சுதாகர் ஜே. மிடாஸ்