’சிறப்பு வகுப்புகள் தேவையில்லை’
மாணவர்களது தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துதோடு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சமூகத்தில் உயரிய பொறுப்பை ஏற்கும் அளவிற்கு தயார் படுத்துவதை கடமையாக கருதுகிறோம்.குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சியும், ஊக்கமும் அளித்து அதிக மதிப்பெண் பெற வைக்கிறோம். மாணவர்களுடைய மனநிலையை புரிந்த, அனுபவமுள்ள ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் அதிகம் இடம்பெற்றுள்ளதால், பெற்றோர்களது எதிர்பார்ப்பை எளிதில் பூர்த்தி செய்ய முடிகிறது. அனைத்து மாணவர்களையும் கட்டாயம் விளையாட்டுகளில் ஈடுபடுத்துகிறோம். எங்கள் மாணவர்கள் திரோபால், வாலிபால் போட்டிகளுக்கான தமிழ்நாடு அணியில் இடம்பெற்றுள்ளனர். தேசிய அளவிலும் விளையாடி வருகின்றனர். யோகா மற்றும் தியானப் பயிற்சியும் அளிக்கிறோம்.'புளூ பிரிண்ட்’ இல்லாது நடைபெற்ற இந்தாண்டு பொதுத்தேர்வை சிறந்த முறையில் அணுக வேண்டும் என்பதற்காக, மாணவர்களுக்கு வழக்கத்தை விட அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி அளித்தோம். புத்தகத்திற்கு பின்னால் உள்ள கேள்விகளை தவிர, 'கிரியேட்டிவ்’ கேள்விகள் நிறைய கொடுத்து மாணவர்களை தயார்படுத்த வேண்டியிருந்தது. பொதுவாக, அனைத்துப் பாடங்களை முழுமையாக படிக்க வைக்கிறோம். சிறப்பு தேர்வு நடத்தி, ஒவ்வொரு மாணவர்களுடைய பலவீனங்களை கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபட பள்ளி நேரத்திலேயே தனிக்கவனம் செலுத்துகிறோமே தவிர, அதற்காக கூடுதல் நேரத்தைக் எடுத்துக்கொண்டு, சிறப்பு வகுப்புகள் நடத்துவதில்லை. திறம்பட செயல்படாத மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கிறோம். இதற்காக ஆசிரியர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம்.இத்தகைய முயற்சிகளால், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற முடிகிறது. ஒட்டுமொத்தமாக தரமான கல்வியை தர வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். எங்களது நோக்கம் நிறைவேற, ஆசிரியர்களும், இதர பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக் கட்டண சலுகைகளும் உண்டு. சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களை பள்ளிக்கு அழைத்து, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடச் செய்கிறோம். லாப நோக்கமின்றி மாணவர்களின் வளர்ச்சியிலும் சரி, சமுதாய முன்னேற்றத்திலும் சரி ஒரு உந்துசக்தியாக விளங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.-செந்தில்குமார் தலைவர், பாரதி பள்ளி, விஜயமங்கலம்.