இன்ஜினியரிங் பிளஸ் 3
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த 2019-20ம் கல்வி ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிய ஆண்டாக நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வலியுறுத்திய ஆண்டு. அதேநேரம், இந்தாண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது! அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் உலகளவில் அனைத்து துறைகளிலும் பிரதானமான இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இச்சூழலில், அத்தகைய பொறுப்பும், தகுதியும் மிகுந்த இளைஞர்களை உருவாக்கும் கடமை நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. அறிவு சார்ந்த தரமான கல்வியை, கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதில் கலை அறிவியல், இன்ஜினியரிங் என எந்த வேறுபாடும் இல்லை. இளைஞர்களும், அதற்குரிய திறன்களை முழு ஆர்வத்துடன் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்ஜினியரிங் கல்வி பொழிவு இழந்தது விட்டது போன்ற மாயை உருவாக்கப்படுகிறது. உண்மையில், இன்ஜினியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால்,கல்வி நிறுவனங்கள் சரியான திறன்களை பெற்ற இன்ஜினியர்களை உருவாக்குகிறார்களா? என்பது தான் பிரதானமான கேள்வி. எங்கள் கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, அத்தகைய பொறுப்பை உணர்ந்து, இன்றைய நவீன சூழலுக்கு தேவையான 'பிலிப் கிளாஸ் ரூம்’, சி.பி.சி.எஸ்., போன்ற புத்தாக்க பாடத்திட்டம், வசதிகளை மாணவர்களுக்கு வழங்குகிறோம். எதிர்காலத்தில் எந்தமாதிரியான துறையில் பணிபுரிய, மாணவர்களுக்கு விருப்பம் உள்ளதோ, அதற்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். தொழில் நிறுவனங்களுடன் நல்லறவை தொடர்ந்து பேணி காக்கிறோம். பேராசிரியர்களை தொழில் நிறுவன வல்லுநர்களுடன் அவ்வப்போது கலந்துரையாட செய்து, பேராசிரியர்களின் அறிவுத்திறனையும் விரிவுபடுத்துகிறோம். 'இன்ஜினியரிங் பிளஸ் 3’ எனும் திட்டத்தின்படி, தொழில்முனைவோர் பயிற்சி, திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் போட்டித் திறன் பயிற்சி எனும் மூன்று முக்கிய பயிற்சிகளை பொறியியல் மாணவர்களுக்கு அளிக்கிறோம். மத்திய அரசின் 10 கோடி ரூபாய் நிதியுதவியில் ’அட்டல் இன்குபேஷன் சென்டர்’ செயல்படுத்துகிறோம். இதில், இளம் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. எங்களது அனைத்து படிப்புகளிலும், தொழில்முனைவோர் திறனையும் இணைத்து வழங்குகிறோம். 'ஸ்கில் டிரைனிங் சென்டர்’ வாயிலாக, மாணவர்களுக்கு அவர்களது துறை சார்ந்த பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கல்வி நிறுவன வளாகத்திலேயே ஐ.ஓ.டி., ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் உட்பட பல்வேறு நவீன ஆய்வகங்களும் இடம்பெற செய்கிறோம். எங்கள் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளை போலவே, ஆர்கிடெக்சர் படிப்பிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு 'மைக்ரோ ஸ்மார்ட் சிட்டி’ யாக எங்கள் வளாகம் உருவெடுத்துள்ளது. -மதன் செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை.