உள்ளூர் செய்திகள்

தோழனாக மாறிய டிஜிட்டல் தொழில்நுட்பம்!

‘டிஜிட்டல்’ யுகத்தில் வாழும் நாம், மொபைல்போன், டேப் போன்ற உபகரணங்கள், இளம் தலைமுறையை சீரழித்துவிடும் என்று கூறி வந்தநிலையில், அதே ‘டிஜிட்டல்’ உபகரணங்கள் தான் தற்போது கல்வி கற்க உதவும் நண்பர்களாக மாறியுள்ளன. கல்லுாரிகளுக்கு செல்ல முடியாத இன்றைய ஊரடங்கு காலத்தில், டிஜிட்டல் கருவிகள் கல்விக்கான பாலமாக உருவெடுத்துள்ளன. பெரும்பாலான மாணவர்களின் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அங்கமாக மாறிவிட்டது.  எங்கள் கல்வி நிறுவனத்தில், ஐந்தாண்டுகளுக்கு முன்பே 60–40 என்ற சதவீதத்தில் டிஜிட்டல் கல்வியை பயன்படுத்த துவங்கிவிட்டோம். இப்போது, 100 சதவீதம் பயன்படுத்துகிறோம். முதலில் சில இடர்பாடுகள், சவால்கள் இருந்தாலும், அனைத்து துறை தலைவர்களுடன் இணைந்து புதிய வழிகளை கண்டறிந்தோம். பாடப்புத்தகங்களில் ‘க்யூ ஆர்’ குறியீடு பயன்படுத்துவதால், மாணவர்கள் சுலபமாக கல்வி கற்க முடிகிறது. முன்பு, கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப துறையினருக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்ட நிலையில், இப்போது அனைத்து பிரிவுகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் விரிவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.டிஜிட்டல் கல்வியால் மாணவர்கள் பன்முக செயல் திறன் உடையவர்களாக திகழ்கின்றனர். வெளிநாடுகளில் மாணவர்கள், புதிய கண்டுபிடிப்புகள், யோசனைகளை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இப்போது நமது மாணவர்களுக்கும் டிஜிட்டல் கல்வி முழுவீச்சில் பயன்படுத்தப்படுவதால், குறிக்கோளை நோக்கி பயணிக்க உந்துகோலாக அமைகிறது. டிஜிட்டல் வழியில் கற்பிக்க ஆசிரியர்கள் துரிதமாக தயார்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டயமாகும். எங்கள் கல்வி நிறுவனத்தில், 15–20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களில் 80 சதவீதம் பேரிடம் 'ஸ்மார்ட்போன்’களும், 93 சதவீதம் பேரிடம் ’லேப்டாப்’களும் உள்ளன. இதனால், டிஜிட்டல் கல்வி வழங்குவதில் சிரமம் ஏற்படவில்லை.’விர்ச்சுவல் லேப்’எங்கள் கல்லூரியில் எல்.எம்.எஸ்., எனும் பாட மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு வைப்பது, ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கவனம் சிதறாமல் கவனிக்க வைக்க திட்டங்கள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ‘லேப்’ வகுப்புகளை மாணவர்கள் உயிரோட்டத்துடன் கற்று கொள்ள ‘விர்ச்சுவல் லேப்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே செய்முறை பயிற்சிகளை செய்யலாம்.  மேலும், மேட் லேப், சாப்ட்வேர்ஸ், டூல்ஸ் என அனைத்து தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பல்வேறு துறை பேராசிரியர்கள், ‘வெபினார்’, ஆன்லைன் போட்டிகள், ஆன்லைன் வேலைவாய்ப்பு போன்றவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில், பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் இலவசமாக வீடு, கட்டட வடிவமைப்பு செய்து தரப்படுகிறது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.- அகிலா, முதல்வர், கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !