உள்ளூர் செய்திகள்

உலகத்தரத்தில் மருத்துவக் கல்வி- சிறந்த கல்வி நிறுவனம்

உ.பி.,யின் லக்னோவில் 1983ம் ஆண்டு சஞ்சய்காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் தொடங்கப்பட்டது. நகரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் 550 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. சுயமாக பட்டப்படிப்புகள் வழங்கும் அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் இது. எனினும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற படிப்புகளையே இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது. உலகத்தரத்தில் மருத்துவ கல்வி வழங்குவது இதன் சிறப்பு. இங்குள்ள டி.எம்., படிப்புகள்- கார்டியாலஜி- கிளினிக்கல் இம்யுனாலஜி- எண்டோகிரைனாலஜி- கேஸ்ட்ரோஎன்டராலஜி- மெடிக்கல் ஜெனிட்டிக்ஸ்- நெப்ராலஜி- நியூராலஜி எம்.சிஎச்., படிப்புகள்- கார்டியோ வாஸ்குலர் அண்டு தொரேயிக் சர்ஜரி- எண்டோகிரைன் சர்ஜரி- நியூரோசர்ஜரி- சர்ஜிகல் கேஸ்ட்ரோஎன்டராலஜி- யூராலஜி பி.டி.எப்., படிப்புகள்- ரீனல் டிரான்ஸ்பிளான்டேஷன் மெடிசின்- ரீனல் டிரான்ஸ்பிளான்டேஷன் சர்ஜரி- பேங்கிரியாட்டிகோ பிலியரி சர்ஜரி பி.டி.சி.சி., படிப்புகள்- அபர்தீசிஸ் டெக்னாலஜி அண்டு காம்பனன்ட் தெரபி- கார்டியாக் அனஸ்தீசியா- எண்டோகிரைன் சர்ஜரி- கேஸ்டிரோ ரேடியாலஜி- இன்பெக்ஷியஸ் டிசீசஸ்- லேபாரட்டரி இம்யுனாலஜி- நியுரோ அனஸ்தீசியா- நியுரோ ரேடியாலஜி- நியுக்ளியர் நெப்ரோ யூராலஜி- பீடியாட்டிரிக் எண்டோ கிரைனாலஜி- பீடியாட்டிரிக் கேஸ்டிரோ என்டராலஜி- ரீனல் பேதாலஜி சீனியர் ரெசிடன்ட் படிப்புகள்- அனஸ்தீசியாலஜி- கார்டியாலஜி- இம்யுனாலஜி - கிளினிக்கல் ஹெமட்டாலஜி- கிரிட்டிகல் கேர் மெடிசின்- சி.வி.டி.எஸ்.,- எண்டோகிரைனாலஜி- எண்டோகிரைன் சர்ஜரி- கேஸ்டிரோ என்டராலஜி- ஜெனிட்டிக்ஸ்- லேபாரட்டரி ஹெமட்டாலஜி- மைக்ரோபயாலஜி- நெப்ராலஜி- நியுராலஜி- நியுரோசர்ஜரி- நியுக்ளியர் மெடிசின்- பேத்தாலஜி- ரேடியோடயக்னாசிஸ்- ரேடியோதெரபி- சர்ஜரி கேஸ்ட்ரோஎன்டராலஜி- டிரான்ஸ்பியூஷன் மெடிசின் எம்.டி., படிப்புகள்- அனஸ்தீசியாலஜி- இம்யுனோஹெமட்டாலஜி அண்டு பிளட் டிரான்ஸ்பியூசன்- மைக்ரோபயாலஜி- நியுக்ளியர் மெடிசின்- பேத்தாலஜி- நியுக்ளியர் டயக்னாசிஸ்- ரேடியோதெரபி பி.எச்டி., படிப்புகள்- எண்டோகிரைனாலஜி- எண்டோகிரைன் சர்ஜரி- கேஸ்ட்ரோஎன்டராலஜி- இம்யுனாலஜி- மெடிக்கல் ஜெனிட்டிக்ஸ்- மைக்ரோபயாலஜி- நியுராலஜி- நியுக்ளியர் மெடிசின்- பேத்தாலஜி- ரேடியோதெரபி- சர்ஜிக்கல் கேஸ்ட்ரோஎன்டராலஜி- டிரான்ஸ்பியூசன் மெடிசின் இந்த கல்விநிறுவனத்தில் உள்ள லைப்ரரியில் ஏறத்தாழ 16 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள் புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பலன் பெரும் வகையில் குறைந்த செலவில் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையும் உள்ளது. இந்த கல்விநிறுவனத்தின் வளாகம் தூய்மையான, அகலமான சாலைகள், பூங்காக்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நீச்சல்குளம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பேஸ்கட் பால் அரங்கங்களும் இங்குள்ளது. ஒரு மேல்நிலைப்பள்ளியும், தபால் நிலையமும், வங்கிக்கிளையும் இதன் வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !