உள்ளூர் செய்திகள்

வெள்ளிவிழா காணும் அருணாச்சல் பல்கலை., - சிறந்த கல்வி நிறுவனம் (45)

அருணாச்சல் பிரதேசத்தில் 1984ம் ஆண்டு அருணாச்சல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தொடங்கிவைத்தார். இது 2005ம் ஆண்டு ராஜிவ்காந்தி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2007ல் மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இது இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு இது. மாநில தலைநகர் இடாநகரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள ரோனோ குன்றின் உச்சியில், திக்ராங் நதியை பார்த்தவாறு இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 302 ஏக்கர். இந்த பல்கலைக்கழகத்துடன் ஏழு கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த கல்வி நிறுவனங்களும் இந்த பல்கலைக்கழகத்தின் உதவியை பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகத்திலும், இதனை சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. விரைவில் இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக அருணாச்சல் பல்கலைக்கழகம் திகழும் என கருதப்படுகிறது. இங்குள்ள துறைகள் மேலாண்மை பிரிவின்கீழ்- வணிகம்- மேலாண்மை தொழில்நுட்ப பிரிவின்கீழ்- கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் மொழி பிரிவின்கீழ்- ஆங்கிலம்- இந்தி சமூக அறிவியல் பிரிவின்கீழ்- பொருளாதாரம்- வரலாறு- பொலிட்டிக்கல் சயின்ஸ்- மாஸ் கம்யூனிகேஷன் கல்வி பிரிவின்கீழ்- கல்வித்துறை பேசிக் சயின்ஸ் பிரிவின்கீழ்- கணிதம் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவின்கீழ்- புவியியல் உயிர் அறிவியல் பிரிவின்கீழ்- தாவரவியல்- விலங்கியல் இங்குள்ள சிறப்பு மையங்கள்- அருணாச்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டிரைபல் ஸ்டடீஸ்- இன்ஸ்டிடியூட் ஆப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்- சென்டர் பார் எக்சலன்ஸ் இன் பயோடைவர்சிட்டி கல்வித்துறை சார்பில் பி.எட்., படிப்பு இங்கு வழங்கப்படுகிறது. வணிகம், பொருளாதாரம், கல்வி, ஆங்கிலம், புவியியல், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், இந்தி துறைகளில் முதுநிலை மற்றும் பி.எச்.டி., படிப்புகள் உள்ளன. ஆந்ரபாலஜியில் முதுநிலைப்படிப்பையும், எம்.பில்., படிப்பையும் இன்ஸ்டிடியூட் ஆப் டிரைபல் ஸ்டடீஸ் வழங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளும், பாடத்திட்டமும் மேம்படுத்தப்பட்டு வருவதால், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அருணாச்சல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை www.rgu.ac.in என்ற வெப்சைட்டில் காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !