உள்ளூர் செய்திகள்

படித்தவுடன் வேலை வேண்டுமா?

டிஸ்க் ஜாக்கி இசையில் ஆர்வமுடையவர்களுக்கான துறை இது. பப்கள், டிஸ்கோதேகள், பார்டிகளில் டி.ஜே., எனப்படும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான தேவை எப்போதும் இருக்கிறது. ஆனால் இதற்காக முறையாக படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு. தற்போது ‘சி.டி., டார்ன்டேபிள் கோர்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘கியூயிங்’, ‘சாப் மிக்சிங்’, ‘பீட் மேட்சிங்’, ‘லைவ் லூப்பிங் எக்ஸ்டென்டட் பிரேக்ஸ்’, ‘பீட்ஸ் ஜக்லிங் அண்டு ஸ்கராட்சிங்’ போன்றவை குறித்து இதில் கற்றுத் தரப்படுகிறது. நிறைவான சம்பளம் கிடைப்பதால் இந்த துறையில் நுழைய இப்போது யாரும் தயங்குவதில்லை. டில்லியில் இருக்கும் ‘ஸ்பின்குரு‘ நிறுவனம் டி.ஜே.,களுக்கான பிரத்யேகமான படிப்பை வழங்குகிறது. இதில் இசை, டி.ஜே.,களுக்கு தேவையான கருவிகள், அவற்றை இயக்குவது குறித்து கற்றுத்தரப்படுகிறது. முன்பு டி.ஜே., டர்ன்டேபிள் கருவிகளின் விலை அதிகமாக இருந்தது. இப்போது தரமான கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. டில்லியில் இருக்கும் ‘டி.ஜே., ஜேசி ஜோஸ் டி.ஜே., ஒர்க்ஷாப்’, ‘டி.ஜே., சன்னி ஜாரிட் சவுண்ட் ஆப் மியூசிக்’ ஆகியவற்றிலும் டி.ஜே., படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 25 மணி நேரம் முதல் 100 மணி நேரம் வரை மட்டுமே படிப்பு காலம். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. டி.ஜே.,வாக புகழ்பெறுபவர்களுக்கு இந்த துறையில் நட்சத்திர அந்தஸ்தும் கூட கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !