கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் (கேட்) துறை அறிமுகம்
கட்டடக் கலை மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் கலை, அறிவியல், தொழில் நடத்தை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர்உதவியுடன் வடிவங்களை உருவாக்குவது Computer Aided Design (CAD) என அறியப்படுகிறது. வடிவமைக்கும் துறையில் ஈடுபடும் ஆர்க்கிடெக்டுகள், இன்ஜினியர்கள் போன்றோருக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான உபகரணங்களின் மூலமாக வடிவமைக்கும் அம்சங்கள் இந்த டிசைன் சிறப்புத் துறையில் கற்றுத் தரப்படுகின்றன. இத் துறையில் சாப்ட்வேர், சிறப்பு ஹார்ட்வேர் இரண்டுமே அதிகமாக பயன்படுகின்றன. தற்போதைய கேட் பேக்கேஜில் 2டி வெக்டார் பேஸ்டு டிராப்டிங் சிஸ்டம், 3டி, சாலிட் அண்ட் சர்பேஸ் மாட்யூலர் போன்ற உத்திகள் பயன்பாட்டில் உள்ளன. நுகர்வோருக்குப் பயன்படும் இறுதி வடிவங்களையும் இடைநிலை வடிவங்களையும் உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவது, மிகுந்த பயன்தரத் தக்க வகையில் வடிவங்களை உருவாக்குவது போன்ற பணிகளை கேட் மூலமாக செய்து கொள்ளலாம். உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாக தயாரிப்பு, கட்டடங்களுக்கான வரைபட மாதிரிகளை உருவாக்குவது, மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் வரைபடங்களை உருவாக்குவது போன்ற பல பணிகளிலும் கேட் முறையின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனினும் 3டி மாடல்களையும் 2டி மாதிரி வரைபடங்களையும் உருவாக்குவதே கேட்டின் முக்கிய பயன்பாடாக உள்ளது. மேலும் பொறியியல் துறையில் கான்செப்ட் டிசைனில் துவங்கி லே அவுட்களை உருவாக்குவது, கட்டட மாதிரியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தல், உற்பத்திக்கான பொருட்களின் தேவையறிந்து அதற் கேற்ப அவற்றை உற்பத்தி செய்வது ஆகியவற்றிலும் கேட்டின் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. கேட் தொழில் நுட்பம் மூலமாக பொருட்களை வடிவமைப்பதால் செலவுகள் கணிசமாகக் குறைகின்றன. அதேபோல மிகக் குறுகிய கால அவகாசத்திலேயே நமக்குத் தேவைப்படும் கட்டிட மாதிரிகளையும் உருவாக்க முடியும். வடிவமைப்பாளர்களின் எண்ணத்திற்கேற்ப திரையில் பார்த்திடும் விதத்தில் வடிவம் தரவும் அதைத் திருத்தவும் சேமித்து வைத்து தேவைப்படும் போது மீண்டும் பார்த்திடவும் கேட் பெரிதும் உதவுவதால் இன்று இத் துறைக்கான முக்கியத்துவம் அதிகமாக உணரப்படுகிறது. கேட் படிப்புகள் பொதுவாகவே 3 அல்லது 6 மாதங்களில் படித்து முடிக்கக் கூடிய குறுகிய கால படிப்புகளாகவே தரப்படுகின்றன. இதைப் படித்திட பிளஸ் 2வில் அறிவியல் அல்லது தொழில் நுட்பம் படித்திருப்பதுடன் சிறப்பான மதிப்பெண்களையும் பெற்றிருப்பது விரும்பப்படுகிறது. கேட் படிப்பில் சேரும் போது பொதுவாக பொறியியல் மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கே பிற துறையினரைவிட அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., மூலமாக படிப்பு முடித்தவர்க்ள கேட்/கேம் படிப்பில் சேரலாம். சேர்க்கை முறையில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒவ்வொரு தகுதி முறையை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக ஜாதவ்பூரிலுள்ள சென்டர் பார் கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் நிறுவனத்தில் சேர அடிப்படைத் தகுதிகளாக பி.டெக்., பி.இ., ஏ.எம்.ஐ.இ., பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.ஏ.,/பி.எஸ்சி., ஜியாக்ரபி தகுதியை கோருகிறது. பி.எஸ்சி., படிப்பு முடித்திருப்பவர்கள் கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் இவற்றில் ஒரு பாடத்தைப் படித்திருக்க வேண்டும் எனவும் சில கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. கேட்/கேம் முடித்துப் பணியில் சேரும்போது பொறியியல் திறனாளர் (Engineering Craftsperson) என்னும் பணி புரியலாம். டிராப்ட்ஸ்பெர்சன், இன்ஜினியரிங் டெக்னீசியன் என்று படிப்படியாக பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் பகுதி நேரப் படிப்பாக EDEXCEL/BTECH HNC/D/SQA NC/NVQ/SV Level 3 படிப்புகளை பணியில் இருந்து கொண்டே படிக்கலாம். பொதுவாகப் பணியில் சேருவதற்கு முன்பே இப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து விட்டு பணியில் சேருமாறு துறையினர் அறிவுறுத்துகின்றனர். துறையில் படிப்பு முடிப்பவர்களுக்கு உற்பத்தி ஆலைகள், ஆய்வு மையங்கள் மற்றும் இவை தொடர்புடைய நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்புகள் உள்ளன. இத் துறையில் உள் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் துறை ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்கள் இத்துறையில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்குத் தான் கேட்/கேம் படிப்பும் பயிற்சியும் அதிக பலன் தருவதாக உள்ளது. அடிப்படையில் துறையில் அதிக அளவு ஆய்வுப் பணிகளும் அதன் பின்னரே வளர்ச்சிப் பணிகளும் உள்ளன. சம்பளம் அல்லது வருமானம் என்ற அடிப்படையில் இத் துறையானது சிறப்பான எதிர்காலத்தைத் தருவதாக உள்ளது. மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சாதாரணமாக துறையிலுள்ள திறனாளர்கள் வருவாய் பெறுகின்றனர். சில சிறப்புக் கல்வி நிறுவனங்கள் Institute for Design of Electrical Measuring InstrumentsSwatantryaveer Tatya Tope Marg, Chunabhatti, Sion,Mumbai 400 022 INDIAதொலைபேசி: 022 2405 0301 / 2405 0302, 2405 0303 / 2405 0304 இணைய தள முகவரி: http://idemimumbai.com Computer Aided Design CentreDept. of Computer Science & Engg, Jadavpur UniversityKolkata700 032West Bengal, India +91 33 2414 6844cadcentr@cadcentreju.org http://cadcentreju.org/ Department of Mechanical Engineering, IIT, GuwahatiNorth Guwahati,Guwahati 781 039, Assam0361 2582664, 2582651 (Office)gskumar@iitg.ernet.inhttp://www.iitg.ac.in/ MSMEDevelopment Institute,Govt. of India, Ministry of MSME, Kurla Andheri Road,Sakinaka, Mumbai400072912228576090/3091/7166smallind@vsnl.com MSME Development InstituteGovt. of India, Ministry of Micro, Small and Medium Enterprises,65/1, G.S.T. Road, Guindy, Chennai600 0320442250 1011/12/13sisichennai@eth.net Bhubanananda Orissa School of EngineeringSCB Medical College Road, Cuttack 7, (Orissa) Birla Institute of Technology,Ranchi, (Bihar).