உள்ளூர் செய்திகள்

பங்கு வணிகம் பற்றி கற்க...

  அரியானாவின் பரிதாபாத்தில் அமைந்துள்ளது ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பினான்ஷியல் மேனேஜ்மென்ட்’ (என்.ஐ.எப்.எம்.,) மும்பை பங்குச்சந்தையுடன் இணைந்து ‘எக்சிகியூட்டிவ் புரோக்கிராம் இன் கேபிடல் மார்க்கெட்’ என்ற படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டாக் எக்சேஞ்ச், கமாடிட்டி எக்சேஞ்ச், ரெகுலேட்டரி பாடீஸ், மார்க்கெட் இன்டர்மீடியரீஸ், வங்கி, மியூச்சுவல் பண்ட், கம்பெனிகளில் சொத்து மேலாண்மை பொறுப்பு போன்றவற்றில் பணியாற்றக்கூடிய திறன் வாய்ந்த வல்லுனர்களை உருவாக்கும் வகையில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கு ஏற்றவாறு இந்த படிப்பை வடிவமைத்துள்ளனர். நிதிச்சந்தையின் அனைத்து பிரிவுகள் பற்றியும் குறிப்பாக பணப் பங்கு, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், கமாடிட்டீஸ், பாரின் எக்சேஞ்ச் போன்றவை பற்றி இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இந்த படிப்பை நிறைவு செய்தவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தை பன்மடங்காக பெருக்கும் வல்லமை பெற்ற நிபுணர்களாக மட்டுமின்றி, சர்வதேச சட்டம் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் செல்வத்தை உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இந்த ஓராண்டு படிப்பில் சேர பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மூன்றாண்டு அனுபவம் அவசியம். இந்த படிப்புக்கான கட்டணம் 2 லட்ச ரூபாய். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !