உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் புதியவர்களுக்கான தேவை

அடுத்தடுத்த 3 ஆண்டுகளாக நமது நாட்டில் புதிதாக படிப்பை முடிப்பவர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஜாப் அவுட்லுக் என்னும் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. 2005ம் ஆண்டை விட 2006ம் ஆண்டில் புதிதாக படிப்பை முடிப்பவர்களுக்கான தேவை அதிகமானது. பின்பு தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. அதிகரிக்கும் சம்பளங்கள், பிற சலுகைகள் போன்றவை புதியவர்களுக்குத் தரப்படுவதும் அதிகரிக்கிறது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட 10ல் 9 நிறுவனங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் புதியவர்களுக்கே கடுமையான தேவை காணப்படுவதாக தெரிவித்தன. கட்டுமானம்,அக்கவுன்டிங் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனங்களில் புதிய பட்டதாரிகள் கடுமையாகத் தேவைப்படுவதாக இவர்கள் தெரிவித்தனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அக்கவுன்டிங், பொருளாதாரம் மற்றும் நிதி, ஐ.டி., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், பிசினஸ் அட்மினிஸ்டிரேசன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் பட்டதாரிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர்.  இது போலவே நிதி, போக்குவரத்து, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பொருளாதாரம் மற்றும் நிதிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்திருப்பவர்கள் வரும் நாட்களில் அதிகமாக பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். சிறப்பான தகவல் தொடர்புத் திறன், நேர்மை மற்றும் நல்ல பண்பு, பிறருடன் சகஜமாகப் பழகும் தன்மை, சிறப்பான தொழிற்பண்புகள், பகுத்தாராயும் திறன், சுயமாகவே ஊக்கம் பெறும் தன்மை, மாற்றங்களுக்கேற்ப தன்மை மாற்றிக் கொள்ளும் இயல்பு, கம்ப்யூட்டர் திறன் மற்றும் ஆழமாக எதையும் பார்க்கும் திறன் ஆகியவற்றைப் பெற்ற புதியவர் நீங்கள் என்றால் வரும் நாட்களில் பிரமாதமான வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !