ஆசியா-இ- பல்கலைக்கழகம் இந்தியாவில் துவக்கம்
31 நாடுகளின் ஒருங்கிணைப்பால் உருவாக்கப்பட்ட ஆசியா-இ-பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மலேசிய அரசால் நடத்தப்படும் இப்பல்கலைக்கழகம் ஆசிய கூட்டுறவு நாடுகளால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா, சீனா, பூடான், பஹ்ரைன், ஈரான், ஜப்பான், கொரியா, குவைத், பங்களாதேஷ், பாகிஸ்தான், ரஷ்யக் கூட்டமைப்பு, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், இலங்கை, சவுதி அரேபியா, தாய்லாந்து போன்ற நாடுகள் ஆசிய கூட்டுறவில் இடம்பெற்றுள்ளன. சென்னையில் நடந்த ஆசியா-இ-பல்கலைக்கழக அறிமுக நிகழ்ச்சியில் மலேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் டத்தோ செரி முகமது கலீத் நுர்தீன் பங்கேற்று துவக்கி வைத்தார். இந்தியாவில் இப்பல்கலைக்கழக படிப்புகளை வழங்க தொலைநிலைக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. பீரோ ஆப் இந்தியன் டிஸ்டன்ஸ் லேர்னிங் (பி.ஐ.டி.எல்) அமைப்பு ஆசியா -இ- பல்கலைக்கழக படிப்புகளை இந்தியாவில் நடத்துகிறது. ‘இப்பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி தரமானதாகவும், அனைவரையும் சென்றடையும் வகையிலும் வடிவமைக்கப்படுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 100 கல்வி மையங்கள் அமைக்கப்படும்’ என்று பி.ஐ.டி.எல். அமைப்பின் தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார். இப்பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் படிப்புகள்: எம்.பி.ஏ. மனிதவள மேலாண்மை, ஹாஸ்பிடாலிட்டி (விருந்தோம்பல்) மேலாண்மை, வினியோக மேலாண்மை, ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் மேலாண்மை, சில்லரை விற்பனை மேலாண்மை, இடர்கள் மேலாண்மை, கார்ப்பரேட் உயிரி தொழில்நுட்பம், நீர்வளத் தொழில்நுட்பம். எம்.சி.ஏ. எம்.ஏ. பொருளாதாரம், சமூகவியல் பி.பி.ஏ. பி.எஸ்சி.செவிலியர், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம், சுற்றுச்சூழல் அறிவியல் பி.சி.ஏ.கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பி.ஏ. சமூகவியல் இவைதவிர, பி.எட்., எம்.எட்., எம்.பில்., பி.எச்டி. மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.பில்., பி.எச்டி. ஆகிய ஆராய்ச்சி படிப்புகள் அறிவியல் பாடங்கள் நீங்கலாக வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு: http://www.aeu.edu.my , http://www.ibdl.in