உள்ளூர் செய்திகள்

தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு...

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை தயார் செய்து கொண்டிருப்பீர்கள். இதோ உங்களுக்கான சில ஆலோசனைகள்... * காலையில் எழுந்தவுடன் உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்து ஐந்து நொடிகள் சிரியுங்கள். * வினாத்தாள்களை பெறும் போது மனதிற்குள் சிரித்துக்கொண்டே வாங்குங்கள். பதில்களை எழுதும் முன் வினாத்தாளை இடது கையில் வைத்துக்கொண்டு, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து சில நொடிகள் காத்திருங்கள். * தேர்வு எழுதும் போது சிறிது ஏலக்காய் மெல்லுங்கள். தேர்வுக்குச் செல்லும் குறைந்தது ஒரு மணி நேரம் முன்பு உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசாதீர்கள், மேலும் ஒரு போதும் முந்தைய நாள் தேர்வுகளை பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். * இரவு நேரத்தில் படித்து முடித்தவுடன் உடனே தூங்க சென்றிடுங்கள். ‘டிவி’ பார்ப்பது மற்றும் விளையாடுவதை தவிர்த்து விடுங்கள். * கிராம்பு சாப்பிடுங்கள், நீங்கள் படிக்கும் அறைகளில் ஊதுபத்தியை பற்ற வையுங்கள். மேஜை விளக்கின் கீழ் படியுங்கள். ஈரத் துணியை வைத்து அவ்வப்போது உங்கள் கண்களை துடைத்துக் கொள்ளுங்கள். பக்திப் பாடல்களையும், பிரசுரங்களையும் கேளுங்கள். படிக்க உட்காரும் முன் குளித்து விட்டு, சிறிது வாசனை திரவியத்தை உங்கள் காதுகளுக்குப் பின் தடவிக் கொள்ளுங்கள், 2 நிமிட வழிபாடு செய்யுங்கள். * படிக்கும் போது முக்கியமானவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது உங்கள் ஞாபக சக்தியை வளர்க்கும், மேலும் நீங்கள் படித்ததை திருப்பி பார்க்கும் போதும் பயனுள்ளதாக இருக்கும். * தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !