உள்ளூர் செய்திகள்

சிறந்த மக்கள் தொடர்பாளராக வேண்டுமா?

மக்கள் தொடர்பு துறை என்பது, ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்கான ஒரு கருவி. ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டுமென்றால் அந்நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாளர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் தரம், தகுதி, உயர்வு குறித்து மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதன் அடிப்படையிலேயே அந்த நிறுவனத்தின் செயல்பாடு லாபகரமானதாக உள்ளதா என்று மதிப்பிடப்படும். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் மக்கள் தொடர்பாளர் அந்நிறுவனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் எந்த வகையை சார்ந்தது, அதை பயன்படுத்துவதால் என்ன நன்மைகளை பெறமுடியும். மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது பொருளின் தரம் எந்த வகையில் உயர்வானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பொருளை இலகுவாக அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டுபோய் சேர்ப்பது என்று அனைத்து பிரிவுகளிலும் தனது கவனத்தை செலுத்தும் திறன் பெற்றவராக திகழ வேண்டும். ஒரு பொருளை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவது என்பது இன்று சவாலான விஷயமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பொருட்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பொருளை விளம்பரப்படுத்துவது எந்த அளவிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறதோ அதேப்போன்று நாளிதழ்களில் அந்த பொருள் குறித்து செய்தியை வெளியிடச் செய்வதும் மிகமுக்கியமானதாக, அந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாக, அனைத்து தரப்பினரின் கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது. மக்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் சிந்தித்து, மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். தான் சார்ந்துள்ள நிறுவனத்தின் பொருளை தவிர பிற நிறுவனங்களின் பொருட்களை தெரிந்து வைத்திருப்பதோடு அவற்றின் நிறைகுறைகளை ஒப்பிட்டு பேசும் திறமையை பெற்றிருக்க வேண்டும். மக்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அவரது பேச்சு அமைந்திருப்பதோடு தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கும் வகையிலோ அல்லது சலிப்பை ஏற்படுத்தும் வகையிலோ பேசி விற்பனைக்கு தேவையில்லாத தடங்களை அவர் ஏற்படுத்தி விடக்கூடாது.  ஒவ்வொரு நாளும் அனைத்து நாளிதழ்களையும் படித்து அன்றைய தொழில்நுட்ப நிலவரங்களை தெரிந்து கொள்வதோடு மக்களின் வாங்கும் சக்தியை அளவீடு செய்வதற்கான திறனையும் அவர் கூடுதல் தகுதியாக பெற்றிருக்க வேண்டும். அரசு சார்ந்த துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மக்கள் தொடர்பாளர் என்ற பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்கென்று தனி பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பனை முடித்தவர்கள் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பினை பெறலாம். இதற்கான படிப்புகள் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள்1. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மாஸ் கம்யூனிகேசன், அருனா அசப் அலி மார்க், நியூ டில்லி-110067.2. சேவியர் இன்ஸ்டியூட் ஆப் கம்யூனிகேசன், செயின்ட் சேவியர் காலேஜ், மும்பை-400001.3. பாரதீய வித்யா பவன், பவன்ஸ் தானா காலேஜ் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மென்ட், வாடியா ஸ்கூல் பிரிமிசஸ், பவான்ஸ் கேம்பஸ், நியர் அப்னா பஜார், வர்சவா ரோடு, அந்தேரி வெஸ்ட், மும்பை-400007.4. பவான்ஸ் பிடிஎன் காலேஜ் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மென்ட், ஹசாரிமல் சோமெனி காலேஜ் பில்டிங், ஐந்தாவது மாடி, குலபதி கேஎம் முன்சி மார்க், சவ்பதி, மும்பை-400007.5. பவான்ஸ் ராஜாஜி காலேஜ் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மென்ட், 37/39 ஈஸ்ட் மாதா ஸ்டிரீட், மைலாப்பூர், சென்னை-600004.6. பவான்ஸ் காலேஜ் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மென்ட், எப்ஏ 3, சால்ட் லேக், கோல்கத்தா-700091.7. பவான்ஸ் அசுடோஸ் காலேஜ் ஆப் கம்யூனிகேசன் அன்ட் மேனேஜ்மென்ட், 77, அசுடோஸ் முகர்ஜி ரோடு, பொவானிபூர், கோல்கத்தா-700025.8. முத்ரா இன்ஸ்டியூட் ஆப் கம்யூனிகேசன்ஸ், ஆமதாபாத்-380058.9. என்எம்ஐஎம்எஸ், விஎல் மேதா ரோடு, வெளிபார்லே வெஸ்ட், மும்பை-400056.10. சம்போசிஸ் இன்ஸ்டியூட் ஆப் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட், சேனாபதி பபட் மார்க், பூனே-411004. 11.இயர் பிஜி டிப்ளமோ இன் அட்வர்டைசிங் அண்ட் கம்யூனிகேசன்ஸ் மேனேஜ்மென்ட், நியூ டில்லி, 12. ஒய்எம்சிஏ, சென்டர் ஆப் மாஸ் மீடியா, 1, ஜெய்சிங் ரோடு, நியூ டில்லி-110001.13. பாரதீய வித்யா பவன், கஸ்தூரிபா காந்தி மார்க், நியூ டில்லி- 110001. மத்திய மாநில அரசுகளின் ஒரு அங்கமாக திகழும் மக்கள் தொடர்பு துறையின் மூலம் மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப முக்கிய முடிவுகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாக மக்கள் தொடர்பாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த துறையை பொறுத்தவரை சமூக பங்களிப்பு அதிகம் உள்ள துறையாக கருதப்படுகிறது. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் நிரந்தர வேலை வாய்ப்பினை பெற்று தரும் மக்கள் தொடர்பு துறையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !