உள்ளூர் செய்திகள்

சிறுநீரகவியல் (யூராலஜி) - துறை அறிமுகம்

சிறுநீரகவியல் என்பது ஆண் மற்றும் பெண்களின் சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் குறைகளை தகுந்த சிகிச்சை முறையில் குணமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து படிக்கும் மருத்துவத் துறையாகும். இத்துறை நிபுணர்கள் ‘யூராலஜிஸ்ட்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். சிறுநீரகவியலில், சிறுநீரகம் , சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்வடிகுழாய் மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் (பிராஸ்டேட் சுரப்பிகள், ஆணுறுப்பு, விரைப்பை) ஆகியவற்றை முழுமையாக கற்கலாம். சிறுநீரகவியல் துறையானது, புற்றுநோயியல் (ஆன்காலஜி), பெண்களுக்கு ஏற்படும் நோய்களை படிக்கும் கைனகாலஜி, ஆண்மையியல் எனப்படும் ஆன்ட்ராலஜி, குழந்தை மருத்துவம், இரைப்பையியல் எனப்படும் கேஸ்டிரோ என்டிராலஜி மற்றும் நாளமில்லா சுரப்பியியல் எனப்படும் என்டோகிரைனாலஜி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. துணை பிரிவுகள்:எண்டோயூராலஜிஅறுவை சிகிச்சைக்கு எதிரான பிரிவாகும். சிறுநீர் பாதைகளில் சிறிய அளவிலான கேமரா, மற்றும் மருத்துவ உபகரணங்களை செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிராஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், கட்டிகள், கல் அடைப்பு போன்றவற்றிற்கு சிகிச்சை முறைகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன. லேப்ரோஸ்கோபி சிறுநீரகவியல் துறையின் சிறப்பு பிரிவாகும். இதில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. வெளிநாட்டு உபகரணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. சிறுநீரக புற்றுநோய் ( யூராலஜிக் ஆன்காலஜி) : இது அட்ரினல் சுரப்பிகள், சிறுநீர்ப்பைகள், சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய், விந்துப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோயை பற்றி ஆராயும் பிரிவாகும். நியூரோ யூராலஜிநரம்பு மண்டலம் தொடர்பான நோய்களான மல்டிபில் ஸ்கிளிரோசிஸ், பர்கின்சன்ஸ் நோய் போன்றவற்றால் சிறுநீர் குழாயின் பாதையில் பிளவு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் உற்பத்தியாவதில் பாதிப்பு ஏற்படுகின்றன. இவைகளை ஆராய்ந்து படிக்கும் துறையாகும். குழந்தை மருத்துவ சிறுநீரகவியல்குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகம் தொடர் பான பிரச்னைகளை ஆராயும் துறையாகும். ஆண்மையியல் (ஆன்ட்ராலஜி) ஆண் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான ஆய்வுகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக மலட்டுத்தன்மை, விரைப்புத்தன்மையில் குறைபாடு, விந்து வடிதல் குறைபாடு போன்றவை இதில் அடங்கும். பெண்கள் சார்ந்த சிறுநீரகவியல்பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரகம் தொடர்பான நோய்களை கண்டறிந்து அவற்றிற்கு முறையான மருத்துவம் மேற்கொள்ளும் பிரிவாகும். பயிலும் நிறுவனங்கள் * எய்ம்ஸ், புதுடில்லி ( http://www.aiims.edu/ )* ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை ( http://srmc.edu/new_univerity/index.html )* அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை ( http://kilpaukmedicalcollege.org/index.htm )* சஞ்சய் காந்தி மருத்துவக்கல்வி நிறுவனம், லக்னோ ( www.sgpgi.ac.in )* முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகார் ( http://pgimer.nic.in/ )* ஜவகர்லால் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி  ( http://jipmer.edu/ )* கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் ( http://www.cmchvellore.edu/ )* கஸ்தர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால் ( http://www.manipal.edu ) வேலைவாய்ப்புகள்சிறுநீரகவியலில் முதுநிலை பட்டபடிப்பு முடித்த பின், தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை நிபுணராக (யூராலஜிஸ்ட்) பணியில் அமர்ந்தால் மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறலாம். பணியில் போதிய அனுபவமும் அறுவை சிகிச்சையில் சிறப்பு நிபுணரான பின் ஊதியம் மேலும் உயர வாய்ப்பு அதிகம். அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்தால் மாதம் ரூ.50 ஆயிரமும், இணை பேராசிரியராக பணி புரிந்தால் மாதம் ரூ.75 ஆயிரமும் ஊதியம் பெறலாம். பேராசிரியராக இருப்பவர்கள் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !