தேஜ்பூர் பல்கலைக்கழகம்
தேஜ்பூர் பல்கலைக்கழகம் 1994ம் ஆண்டு, பார்லிமென்ட் சட்டப்படி துவக்கப்பட்டது. வேலைவாய்ப்பு மிக்க படிப்புகளையும் மற்றும் பல துறைகள் தொடர்பான படிப்புகளை வழங்குவதிலும் இப்பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகின்றன. அசாம் மாநிலத்தில் உள்ள இக் கல்வி நிறுவனம், அம்மாநில மாணவர்களின் உயர்கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகளால் துவக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் ஆராய்ச்சி வசதிகளும் உள்ளன. அசாம் மாநிலத்தின் சானிட்பூர் மாவட்டத்தில் நபாம் என்ற இடத்தில், 242 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலையில் சென்ட்ரல் நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், ஆராய்ச்சி கூடம், தங்கும் விடுதிகள், மருத்துவமனை,வங்கி வசதி, வேலைவாய்ப்பு பயிற்சிகள், ஸ்போர்ட்ஸ் கிளப் போன்ற வசதிகள் உள்ளன. படிப்புகள்: இளநிலை படிப்புகள்* பி.டெக்., (எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)* பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)* பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)* பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)* பி.டெக்., ( உணவு பதப்படுத்துதல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி) முதுகலை படிப்புகள்* எம்.ஏ., (கலை படிப்புகள்)* எம்.ஏ., (ஆங்கிலம்)* எம்.ஏ., (மாஸ் கம்யூனிகேசன் மற்றும் ஜர்னலிசம்)* எம்.ஏ., (சமூகவியல்)* எம்.எஸ்சி., (அப்ளைடு கெமிஸ்ட்ரி)* எம்.எஸ்சி., (மாலிகுலர் பயாலஜி)* எம்.எஸ்சி., (பயோ டெக்னாலஜி)* எம்.எஸ்சி., (கணிதம்)* எம்.எஸ்சி., (இயற்பியல்)* எம்.எஸ்சி., (நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி)* எம்.எஸ்சி., (உணவு பதப்படுத்துதல் டெக்னாலஜி )* எம்.எஸ்சி., (சுற்றுச்சூழல் அறிவியல்)* எம்.டெக்., (இன்பர்மேசன் டெக்னாலஜி)* எம்.டெக்., (எனர்ஜி டெக்னாலஜி)* எம்.டெக்., (எலக்ட்ரானிக் டிசைன் மற்றும் டெக்னாலஜி)* எம்.டெக்., (பயோ எலக்ட்ரானிக்ஸ்)* எம்.சி.ஏ., * எம்.பி.ஏ., முதுகலை டிப்ளமோ* சுற்றுலா மேனேஜ்மென்ட் ஆராய்ச்சி படிப்புகள்:எம்.ஏ., (சமூகவியல்),எம்.எஸ்சி., (உணவு பதப்படுத்துதல் டெக்னாலஜி ) மற்றும் பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) போன்ற படிப்புகளை தவிர மற்ற படிப்புகளுக்கு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் முறை:பி.டெக்., படிப்புக்கு, ஆல் இந்தியா இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வில் (ஏ.ஐ.இ.இ.இ.,) , பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், முதுகலை படிப்புகளுக்கு "கேட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வேலைவாய்ப்பு வசதிகள்:இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தனியாக ஒரு துறை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் வளாகத்தேர்வில் அரசு நிறுவனங்கள் உட்பட ஏராளமான முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. மேலும் விபரங்களுக்கு: www.tezu.ernet.in என்ற பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டை பார்க்கவும்.