உள்ளூர் செய்திகள்

மீடியா தொடர்பான பட்டப்படிப்புகள்

மணிப்பால் பல்கலைக்கழகம் மீடியா தொடர்பான பட்டப்படிப்புகளில், 2010 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை அறிவித்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகள் எம்.பி.ஏ.,(மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட்) மும்பையில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.ஐ.,.,(Whistling Woods International) நிறுவனத்துடன் இணைந்து மணிப்பால் பல்கலைக்கழகம் இந்த இரண்டாண்டு முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகிறது. இத்துறையில் பிலிம் என்டர்டெயின்மென்ட், டிவி மற்றும் ரேடியோ ஒளிபரப்பு, அனிமேஷன், கம்ப்யூட்டர் விளையாட்டுகளை நிர்வகித்தல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகின்றன. எம்.பி.ஏ., (விளம்பரம் மற்றும் தொடர்பு)இரண்டாண்டு முழுநேர முதுநிலை படிப்பான இதில், வியாபாரத்தை கையாளுதல், மார்க்கெட்டிங் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இதர நிறுவனங்களுடன் நட்புறவுடன் பழகுதல் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. தகுதிகள்:முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் முறை:இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.manipal.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெறலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1,000 டிடி யாக அனுப்ப வேண்டும். இதை Manipal Universal Learning Pvt. Ltd என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் டிடியை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய முகவரி:மணிப்பால் கல்வி நிறுவனம்மணிப்பால் டவர்ஸ், எண்.14,எச்.ஏ.எல்., ஏர்போர்ட் ரோடு,பெங்களூரு  560008, கர்நாடகா விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: ஜூன் 30, 2010. வகுப்புகள் துவங்கும் நாள்: ஆகஸ்ட் 2, 2010. மேலும் விவரங்களுக்கு: www.manipal.edu என்ற இணையதளத்தை பாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !