கனடாவில் பட்ட மேல் படிப்புகள்
கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பட்ட படிப்புகள் முடித்த மாணவர்களுக்கு கனடாவில் சிறப்பான பட்ட மேல் படிப்பு கல்விநிறுவனங்கள் உள்ளன. இவர்களுக்கு பி.ஜி., டிப்ளமோ அல்லது எம்.எஸ்., படிப்பதற்கான வாய்ப்புகள் கனடாவில் சிறப்பாக உள்ளன. மாணவர்கள் பி.ஜி., டிப்ளமோ படிப்புகளை படிப்பதன் மூலம் எளிதான வேலைவாய்ப்பை பெற முடியும். எம்.எஸ்., படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படித்தால் இந்த துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும். பி.ஜி., டிப்ளமோ மற்றும் எம்.எஸ்., படிப்புகளின் காலம், கல்வி நிறுவனங்களை பொறுத்து வேறுபடுகின்றன. கனடாவில் பட்ட மேல் படிப்புகளுக்கு மட்டும் 170க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல்தொழில் நுட்ப துறையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்ட மேல் படிப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. அதில் மாணவர்கள் ஒரு ஆண்டு பட்ட மேல் படிப்பு முதல் தங்களுக்கு ஏற்ப கால அளவுள்ள பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மாணவர்கள் தங்களது பட்ட மேல் படிப்பை முடித்தவுடன் கனடாவிலேயே பணிபுரிய மூன்று ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு "விசா' கல்விநிறுவனங்களால் பெற்றுத் தரப்படுகிறது. மேலும் மாணவர்கள் கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பட்ட மேல் படிப்பு பாடப்பிரிவுவிபரங்களை தெரிந்து கொள்ள http://www.educationauincanada.ca என்ற இணையதளத்தை பார்க்கவும்.