உள்ளூர் செய்திகள்

வளரும் டிப்ளமோ படிப்புகள்

தற்போது மாணவர்கள் மத்தியில் டிப்ளமோ படிப்புகள் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. பட்டப்படிப்பை முடித்த பின், தங்களுடைய கூடுதல் தகுதியை பெற விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை படிப்பதற்கு பதிலாக முதுநிலை டிப்ளமோ படிப்புகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த டிப்ளமோ படிப்புகள் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்வோரிடமும் பிரபலம் அடைந்துள்ளது. தங்களுடைய அறிவை மேம்படுத்தவும், தற்போதைய டிரெண்ட்டை பற்றி அறியவும் அவர்கள் படிக்கின்றனர். பொதுவாக ஓட்டல் மேனேஜ் மென்ட், நிதி மேனேஜ்மென்ட், மீடியா, சட்டம் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான டிப்ளமோ படிப்புகளின் மீது மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். டிப்ளமோவா முந்தைய காலகட்டங்களில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகள் மட்டும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. பட்டப்படிப்பை விட டிப்ளமோ படிப்புகள் எளிதான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், போதுமான அறிவைப் பெருவதோடு, உங்கள் காலஅட்டவணைக்கு ஏற்றவாறு படிப்பது இந்த படிப்புகளின் சிறப்பு. மேலும் கல்லூரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வரும் நிறுவனங்கள், டிப்ளமோ படிப்பை முடித்தவர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். முதுநிலை டிப்ளமோ படிப்புகள் பொதுவாக செயல்முறை சார்ந்து பயிற்றுவிக்கப்படுகின்றன. பாடத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல் செயல்முறை பயிற்சிகள் மூலம் பயிலும் துறை முழுவதுமாக அறியலாம். தேர்ந்தெடுத்தல் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை அதிக அளவிலான கல்லூரிகள் வெவ்வேறு துறைகளில் அளிக்கின்றன. மாணவர்கள் விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் சற்று சிந்திக்க வேண்டும். அந்த கல்வி நிறுவனம் அளிக்கும் டிப்ளமோ படிப்புகள் யு.ஜி.சி., அல்லது என்.ஏ.ஏ.சி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., போன்றவற்றின் அங்கீகாரம் பெற்றதா என்பதை அறிய வேண்டும். அவ்வாறு அறிந்து படித்தால் பெறப்படும் சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !