உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களின் கவனத்துக்கு!

பல கனவுகளுடன் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களே உங்களுக்கான சில வழிகாட்டுதல்கள்... படிப்பில் கவனம்சீனியர்களுடன் நல்ல உறவுமுறையை ஏற்படுத்தி கொள்வது பல வகையில் உங்களுக்கு நன்மையளிக்கும்.சிலர் கல்லூரிக்கு சென்றவுடன் தினமும் படிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடுவது வருந்தத்தக்கது. கல்லூரி வாழ்க்கையில் அதிகமான கவனசிதறல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால்நீங்கள் அவற்றை மனவுறுதியுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் மேலும் நல்ல நண்பர்கள் வட்டத்தை அமைத்து கொள்வதுமிகவும் முக்கியம். திட்டமிட்டு படியுங்கள்வகுப்பில் ஆசிரியர் நடத்துவதை நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆசிரியரிடம் தயக்கமின்றி தைரியமாக கேள்வி கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வதோடு, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவுப் பெற வேண்டும். துவக்கத்தில் இருந்தே நன்றாக படிப்பது, ஆசிரியர்களிடம் உங்களுக்கு நன்மதிப்பை பெற்றுத் தரும். கவனிக்கும் ஆற்றல் தேவைஆசிரியர் தினமும் நடத்தும் பாடங்களை குறிப்பு எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வேகமாக எழுதுவதை விட புரிந்து கொள்வது தான் மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் வார்த்தைகளை சுருக்கமாக குறிப்பெடுத்து விட்டு பின்னர் வீட்டிற்கு சென்றவுடன் மீண்டும் சுருக்கி எழுதியதை விரிவாக எழுதிகொள்ளுங்கள் இதன்மூலம் கவனித்ததை திரும்பவும் நினைவுபடுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தேர்வு சமயத்தில் எவ்வித பதட்டமுமில்லாமல் படிக்கலாம். இலக்கில் கவனம் தேவைதினமும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இணையதள வசதியையும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவற்றின் மூலமாக, உங்கள் துறை சார்ந்த அனைத்து நவீன விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது. முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான அனைத்து திறமைகளையும் வளர்த்து கொள்வது மிகவும் முக்கியம். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரியிடம் நீங்களே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள். கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே, ஒரு நல்ல நிறுவனத்தில் உங்களுக்கான வேலை நியமன கடிதத்தை பெற வேண்டும் என்ற சிந்தனையை முதலாம் ஆண்டிலேயே மனதில் விதையுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !