சரியான வேலையைத் தேர்ந்தெடுப்பது எப்படி
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உங்களுக்குப் பொருத்தமான வேலையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருப்பவரா நீங்கள்? சரியான வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐந்து முக்கிய அடிப்படைகளை இங்கு நாம் பார்க்கலாம். உங்களை அறியுங்கள்படிப்பை முடித்த ஒவ்வொருவருக்கும் வரும் பொதுவான குழப்பம் என்பது தாங்கள் எதில் சிறந்து விளங்குகிறோம் என்பதை அறிவதுதான். அதிலும் தொழில் நுட்பப் படிப்பு படிக்காமல் பொதுவான பாடங்களைப் படித்து முடித்து வருபவர்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கும். ஒரு தனி நபரின் திறனைக் கண்டறியும் விதத்தில் 'மெரிட்ட்ராக்' என்ற அமைப்பு தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ.500 முதல் 700 வரை ஆகும். ஆனால் இந்தத் தேர்வை அக்செஞ்சர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி போன்ற பிரம்மாண்டமான நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன என்பது செய்தியாகும். ஐஓபனர் என்ற தேர்வை கேரியர் கைடன்ஸ் இந்தியா என்ற அமைப்பு நடத்துகிறது. இந்தத் தேர்வை எழுத ரூ.500 ஆகும் என்ற போதும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் 3 ஆயிரத்து 500 நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை வாய்ப்பாளரை அறியுங்கள் விப்ரோ போன்ற நிறுவனங்கள் தற்போது பணியிலிருப்பவர்கள் பணி உயர்வுக்கு 70 சதவிகிதம் தகுதியுடையவராக இருந்து, வெளியிலிருந்து புதிதாக வருபவர் 100 சதவிகிதம் தகுதி பெற்றவராக இருந்தாலும், தற்போது பணியில் உள்ளவருக்கே முன்னுரிமை வழங்குகின்றன. எனவே நாம் இணைய விரும்பும் நிறுவனத்தின் மனித வளக் கோட்பாடுகளைப் பற்றி அறிவது முக்கியத் தேவையாகும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அம்சத்திற்கு முக்கியத்துவம் வழங்குகின்ற நிலையில், நமது விருப்பிற்கேற்ற தன்மை கொண்ட நிறுவனத்தில் இணைவதே நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பயிற்சிஒரு நிறுவனத்தில் புதிதாகப் பணியில் இணைபவருக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதுதான் நல்ல பணி எதிர்காலத்திற்கான சிறந்த அடித்தளத்தை இடுகிறது. உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களில் புதிதாகப் பணியில் சேருபவர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிகள் தரப்படுகின்றன. எனவே நாம் இணைய விரும்பும் நிறுவனத்தின் ஆரம்பப் பயிற்சி குறித்த தகவல்கள் மிக முக்கியமானவை. நிறுவனத்தின் புகழும், நற்பெயரும்ஒருவர் உடுத்தும் ஆடையில் துவங்கி, அவர் பணி புரியும் நிறுவனம் வரை அனைத்துமே அவற்றின் பெயரால் அறியப்படுகின்றன. இதனை நிர்வாகவியலார் 'பிராண்ட் நேம்' என்று கூறுவார்கள். ஆனால் ஒருவரின் பணி விருப்புகளை விடுத்து வெறும் நிறுவனப் பெயருக்காக இணைவது தவிர்க்கப்படவேண்டும். நமக்குப் பொருந்துகிறதா?நாம் இணையவிருக்கும் வேலை நமது பணி எதிர்கால முன்னேற்றத்திற்கும், நமது விருப்புகளுக்கும் உகந்தவாறிருக்கிறதா என்பது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். நாம் இணையவிருக்கும் நிறுவனத்தின் தற்போதைய ஊழியர்களிடம் பேசுவதன் மூலம் இதனை நன்றாக அறிய முடியும். இதே போல் சில இணைய தளங்களும் இது குறித்த முக்கியத் தகவல்களைத் தருகின்றன. ஐந்து இலக்க ஊதியம் என்பது நல்ல விஷயம்தான் என்ற போதும், பணத்திற்கு அப்பாற்பட்ட தனி மனிதரின் விருப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. மேலும், ஊதியத் தேவை என்பது ஒவ்வொருக்கிடையிலும் கணிசமாக வித்தியாசப்படும் ஒன்றாகும். எனவே நமது இன்றைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப நமது ஊதியங்கள் முன்னேற்ற மடையும் வாய்ப்புகள் உள்ளனவா என்பதையும் நாம் நன்றாக அறிய வேண்டும்.