உங்களிடம் உள்ளதா எக்ஸ்ட்ரா
எக்ஸ்ட்ரா தகுதி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கூடுதல் தகுதிதான் உங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற்று தரும் என்பதால் ஒவ்வொருவரும் ஒரு கூடுதல் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது..உதாரணமாக தாய்மொழி தவிர்த்து நீங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு,சைனீஸ்,ஸ்பானிஷ், இந்தி போன்ற உலகளவில் பெருமளவில் பேசப்படும் எதாவது ஒரு மொழி தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில்,உங்களது போட்டியாளர்களை விட உங்களையே நிறுவனங்கள் தேர்வு செய்யும். ஏனெனில் பெரிய நிறுவனங்கள் பல உலகின் பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளை கொண்டுள்ளன எனவே அவர்கள் ஊழியர்களை வேலை நிமித்தமாக அங்கு அனுப்புவதற்கு, அந்த மொழிகளை உங்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு பணமும், நேரமும் விரயமாகும் என்பதால் நிறுவனங்கள் இவ்வாறு சிந்திக்க துவங்கியுள்ளன.