சுற்றுலாத் துறை படிப்புகள்
இன்றைய உலகில் ஏராளமான படிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களின் கவனத்தில் இருப்பது இன்ஜினியரிங் அல்லது மருத்துவம் ஆகிய படிப்புகள் தான். இரண்டு துறைகளும் மதிப்புமிக்க துறைகள் தான். இருந்தாலும் போட்டிகள் குறைவாகவும், அதே நேரத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள துறைகளுள் ஒன்று தான் சுற்றுலாத்துறை படிப்புகள். நம் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்க்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. எனவே சுற்றுலாத்துறை வளர்ந்துவரும் துறையாகும். மாணவர்கள் சுற்றுலா சம்பந்தமான படிப்புகளை தேர்வு செய்வதற்கு, பிளஸ் 2 முடித்தவுடன் இளநிலை படிப்பில் ஆங்கிலம் அல்லது டிராவல் மற்றும்டூரிசம் அல்லது ஹாஸ்பிடாலட்டி மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். எம்.பி.ஏ., டூரிசம் இளநிலை படிப்புகளை முடித்த பின்பு எம்.பி.ஏ., (டூரிசம்) படிப்பை தேர்ந்தெடுக்கலாம். இப்படிப்பை படிக்கும் போதே ஆங்கில அறிவு, அடிப்படை தகவல் தொடர்பு மொழி, பிரஞ்சு, ஜப்பானியம் போன்ற வெளிநாட்டு மொழிகள், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற உள்நாட்டு மொழிகள், வரலாறு, புவியியல், எதிர்கால இந்தியா, தலைமைப்பண்பு, கடின உழைப்பு போன்ற எக்ஸ்ட்ரா தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் போதே இந்த எக்ஸ்ட்ரா தகுதிகளை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால் சுற்றுலாத்துறை படிப்புகளில் நீங்களும் சாதிக்கலாம். எங்கு படிக்கலாம்சுற்றுலாத்துறையில் எம்.பி.ஏ., (டூரிசம்), எம்.டி.எம்., (மாஸ்டர் ஆப் டூரிசம் மேனேஜ்மென்ட்) மற்றும் எம்.ஏ., (டூரிசம் மேனேஜ்மென்ட்) ஆகிய படிப்புகள் உள்ளன. எம்.பி.ஏ., (டூரிசம்) படிப்பு இந்தியாவில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம், (www.pondiunni.org)தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அன்ட் ஹாஸ்பிடாலட்டி (www.nithm.ac.in)காஷ்மீர் பல்கலைக்கழகம் (www.kashmiruniversity.net)டி.ஒய். பட்டில் பல்கலைக்கழகம் (www.dypatiluniversity.org)கேரளா பல்கலைக்கழகம் (www.keralauniversity.ac.in)இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அன்ட் டிராவல் மேனேஜ்மென்ட் (www.iittm.org) எம்.ஏ., (டூரிசம் மேனேஜ்மென்ட்) படிப்பும் சில பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வேலைவாய்ப்புகள்எம்.பி.ஏ., (டூரிசம்) படிப்பை முடித்த பின் பி.எச்டி., முடித்தால் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றலாம். அரசு மற்றும் தனியார் டிராவல் மற்றும் டூரிசம் துறைகளில் ஏராளமான மேலாண்மை பணிவாய்ப்புகள் உள்ளன. பெரிய சுற்றுலா ஏஜென்சிகள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.