மன அழுத்தத்தால் அவதிப்படும் ஆசிரியர்கள்
இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர் மிகச் சிலர் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் முடிய எல்லோரும் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க நமது மன அழுத்தமும் அதிகரிக்கிறது என்றே உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் மட்டும் விதி விலக்கா? நேரமின்மையை மாணவர்கள் உணருவது போலவே ஆசிரியர்களும் உணருகிறார்கள். இன்று கல்வியானது தொழிலாகி விட்டது. எனவே ஆசிரியர்களும் தொழிலாளர்களாகவே மாறிவிட்டனர். இத்தகைய சூழலில் தான் அவர்கள் மன அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணம். ஆசிரியர்களிடம் பெற்றோரும் சமூகமும் எதிர்பார்ப்பது வெகுவாக இன்று உயர்ந்திருக்கிறது. எனவே இவர் களின் பொறுப்புகள் அதிகரித்திருக் கின்றன. இதனால் கூடுதல் பொறுப் போடு கடுமையான சமூக எதிர்பார்ப்புக் கிடையே இவர்கள் பணி புரிகிறார்கள். ஆசிரியர்களின் மனநலம் மற்றும் மன அழுத்தத்தை அடையாளம் காணும் ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாடம் நடத்தும் நேரங்களில் ஆசிரியர்களின் இதய ரத்த ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பது ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், பாடம் நடத்தும் போது ஆசிரியர்களின் ரத்த அழுத்தமும் துடிப்பும் அதிகரிப்பதை இது உறுதி செய்தது. ஒரு வகுப்பு தொடங்குவதற்கு முன்பும் பின்பும் இது அறியப்பட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் மாணவ ரோடும் பிற ஆசிரியரோடும் ஏராளமாக உரையாடுவது, தொடர்ந்து நின்றுகொண்டே பாடம் நடத்துவது இவர்களின் உடல் நலத்தை பாதிக்கிறது . அவர்களை சோர்வடையச் செய்கிறது. தங்கள் பொறுப்பில் உள்ள மாணவர் களை பாதுகாக்கும் பொறுப்புணர்வு இவர்களை சப்தமின்றி வருத்துகிறது. மாணவர்கள் படிப்பிலும் நடத்தையிலும் காட்டும் முன்னேற்றம் தான் இவர்களின் மன அழுத்தத்தை லேசாக்குகிறது. இது தான் ஒரே ஆறுதல். இன்றைய கடுமையான போட்டிச் சூழலில் பள்ளி நிர்வாகம், பெற்றோர், மாணவர்கள், குடும்பம் என அத்தனை பேரின் எதிர்பார்ப் புகளையும் நிறைவேற்ற ஆசிரியர்கள் பிரயத்தனம் செய்கிறார்கள். இதனால் இவர்களின் பணிச் சுமையும் மனச் சுமையும் அதிகரிக்கிறது. நல்ல ஆசிரியர்களை மதிக்காத பள்ளிகள் நீடித்ததை நாம் பார்த்த தில்லை. எனவே ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளை பள்ளிகள் செய்து தருவது மிக அவசியம். நல்ல ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் தர வேண்டும். மாணவர்களின் நலனை மேம்படுத்தும் ஆசிரியர்களை மதிப்போம். அவர்களின் நலன் காப்போம்.