உள்ளூர் செய்திகள்

மரைன் இன்ஜினியரிங் படிக்க...

மரைன் இன்ஜினியரிங் என்பது, கப்பல்கள் மற்றும் கடல்சார்ந்த கொள்கலன்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, நிர்வாகம் உள்ளிட்டவற்றை முழுவதுமாக படிக்கும் இன்ஜினியரிங் துறையாகும். நம்நாட்டில் இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களை காண்போம். * ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாடிக்கல் சயின்ஸ், மதுரை இக்கல்வி நிறுவனத்தில் இளநிலை பிரிவில்(பி.எஸ்.,) மரைன் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.rlinstitutes.com * மரைன் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோல்கட்டா நான்கு ஆண்டு இளநிலை (பி.இ.,) பட்டப்படிப்பில் இந்த படிப்பு உள்ளது. ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.merical.ac.in * ஐ.எம்.எஸ்.,, கோவா மரைன் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகளுக்கு இக்கல்வி நிறுவனத்தில் ஒரு ஆண்டு "கடல் தொடர்பான பயிற்சி படிப்பு' கற்றுத்தரப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.imsgoa.org * அமெட் பல்கலைக்கழகம், சென்னை இப்பல்கலையில் நான்கு ஆண்டு இளநிலை படிப்பு அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.ametuniv.ac.in * எம்.ஏ.என்.இ.டி.,, மும்பை நான்கு ஆண்டு இளநிலை (பி.இ.,) பட்டப்படிப்பில் மரைன் இன்ஜினியரிங் வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manetpune.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !