என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை விவரங்களின் வரிசையில் கடந்த இதழில் அறியப்பட்ட சிவில் மற்றும் மெக்கானிகல் துறைகளின் தொடர்ச்சியாக இந்த இதழில் எலக்ட்ரிகல், எலக்ரானிக்ஸ் மற்றும் தொலை துறையின் விபரங்களை அறிவோம். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் துறை (EEE) ஒவ்வொருவரின் வாழ்விலும் தினசரி உபயோகத்தில் உள்ள தொலைக்காட்சி குளிர்விப்பான், மோட்டார், ஜெனரேட்டர் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் உற்பத்தி, செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய படிப்பே இத்துறையினரின் ஆற்றலாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்விடத்தில் உள்ள மின்சார உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் அளவை பொறுத்தே அமைகின்றது. அத்தகைய மின் ஆற்றலின் தட்டுப்பட்டால் நாள்தோறும் சில மணி நேர மிசார தடை அதன் மூலம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்படுவது தினசரி காட்சிகளாகின்ற தற்போதைய காலகட்டத்தில் அரசும் தனியார் துறையும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் அதிக அளவில் இத்துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருகும் என்பதில் சிறுதும் ஐயமில்லை. வருங்கால மின் உற்பத்தி தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான செயல் திட்டத்தின் வாயிலாக எலக்ட்ரிக்கல் பொறியாளர்களின் தேவைப்பாடு அதிக அளவில் இருக்கும். நாட்டில் அனைத்து தொழில் துறையும் மின்சாரத்தினை நம்பிருப்பதனால் அரசு துறை மட்டுமல்லாது தனியார் துறையினரும் காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் போன்றவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் தனது தேவைக்கும், மிதமானவை பொது உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுவதனால் வருங்காலத்தில் அதிக அளவிலான தனியார் துறை வேலைவைப்புக்களும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 410௦ மேற்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியில் கல்லூரிகளில் உள்ள எலக்ட்ரிகல் துறையில் சுமார் 26,700 இடங்களும், மாணவ மாணவிகள் என இருபலரின் போட்டியில் இத்துறை தேர்வு செய்யப்படுவதும், இத்துறையின் சீரான வளச்சியும், துறையின் வேலை வாய்ப்புக்களும் தற்போதைய சூழ்நிலையில் இதன் தேர்வு மாணவர்களின் சரியான முடிவாகும். தமிழ்நாட்டில் பொறியில் சேர்க்கையில் 2006 ம் ஆண்டு 56% மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து இத்துறையானது தற்பொழுது 2010ம் ஆண்டில் 90% ௦ மேலான இடங்களை நிரப்பப்பெற்றுள்ளது. மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் இத்துறை 4ம் இடத்திலிருக்கின்றது. Power systems, Power Electronics, Embedded System, Applied Electronics, VLSI design, Avionics, Space Science போன்ற முதுகலை (M.E) படிப்புகளையும், தமிநாடு மின்சார துறையில் Junior Engineer (JE) மற்றும் Assit Engineer (AE) போன்ற அரசு வேலை வாய்ப்புகளும், தனியார் மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களும் இத்துறை மாணவர்களின் எதிர்கால நம்பிக்கைகள் ஆகும். பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவையில் அளிக்கப்படும் Sandwitch Courses எனப்படும் 5 வருட பொறியியல் பட்டப்படிப்பில் அதிக அளவிலான செய்முறை அறிவை பெறுவதன் வாயிலாக சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம். தற்பொழுது அதிக அளவில் பன்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறைகளும் கணினி துறை மாணவர்களுக்கு இணையாக எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களை பணிக்கு தேர்வு செய்வதன் மூலம் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. சிறப்பான கல்லூரிகள் கல்லூரிகளின் பெயர் 1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 19302. ஏ.சி பொறியியல் கல்லூரி, காரைக்குடி - 19523. அரசு தொழிநுட்ப கல்லூரி, கோவை - 19524. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை - 19515. அரசு பொறியியல் கல்லூரி, சேலம் - 19666. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி - 19867. தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை - 1957 எலக்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு துறை (ECE) மனிதர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியாமான உணவு, உடை மற்றும் உறைவிடம் என்பதற்கு அடுத்தபடியாக செல்போன் எனப்படும் தகவல் தொலை தொடர்பு சாதனம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக திகழ்கின்றது. பொறியியல் படிப்பில் இத்துறையில் மட்டும் தொலை தொடர்பின் அறிவை பெறுவது இத்துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் விளங்க வைக்கின்றது. கடந்த 10௦ ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை பள்ளி மாணவர்களின் தேர்வில் முதல் இடத்தில் இருப்பதும், ஆண்டு தோறும் என்தொரி தேய்வும் இல்லாமல் 95% மேற்பட்ட இடங்களை நிரம்பப் பெறுவதும் இதன் வலிமையை மாணவர்களுக்கு உணர்த்துகின்றது. பெரும்பாலும் அனைத்து கல்லூரிகளும் அதிக இடங்களை (120) பெற்றிருப்பதினால் தமிழ்நாட்டில் சுமார் 40,000௦௦ மேற்பட்ட இடங்களுடன் முதல் தரவரிசையை இத்துறை வைக்கின்றது. ஒவ்வொரு வினாடியும் புதுப்புது தகவல்களை இத்துறை மாணவர்களுக்கு வழங்குவதனால் என்றுமே இது ஒரு சிறப்பான இடத்தை கொண்டிருக்கின்றது. தற்பொழுது அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறியப்பட்ட 2G அலைக்கற்றை ஒதுக்கிடு மற்றும் அதன் பொருள் மதிப்பு இத்துறை செல்வச்செழிப்பை அறிவிக்கின்றது. இந்நேரத்தில் கல்வி ஆலோசகர் ஆகிய நானும் இத்துறையில் பொறியில் பட்டம் பெற்றவன் என்பதில் பெருமை அடைகின்றேன். இத்துறை மாணவர்கள் Embedded System, VLSE design, Medical Electronics, Optical Communication, Communication System, Avionics, Network Engineering போன்ற ஆராய்ச்சி முக்கியத்திவம் வாய்ந்த முதுகலை பொறியியல் (M.E) படிப்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். என்றும் நிலையான மற்றும் வேகமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் தொலை தொடர்பும், அதிக அளவிலான தகவல் தொழில் நுட்ப துறை வேலை வாய்ப்பும், பொறியியல் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் ஆசிரியர் பணியும், அதிக ஆராய்ச்சி வாய்ப்புகளும் இத்துறைக்கு என்றுமே பசுமையான எதிகாலம் உள்ளது என்பதனை உறுதி செய்கின்றது. தமிழ் நாட்டில் அதிக அளவில் 470௦ மேற்பட்ட கல்லூரிகளும், அவற்றில் சுமார் 40,000௦௦௦ மேற்பட்ட இடங்களும் அதிகமான எண்ணிக்கையுள்ள மாணவர்களின் இத்துறை ஆர்வத்தினை பூர்த்தி செய்கின்றன. சிறப்பான கல்லூரிகள் கல்லூரிகளின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 1946மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை - 1946ஏ.சி பொறியியல் கல்லூரி, காரைக்குடி - 1969அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 1968அரசு பொறியியல் கல்லூரி, சேலம் - 1973அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி - 1981அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை - 1970பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை - 1968 தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை - 1978 மாணவர்களின் மனதில் தற்பொழுது எழும் ஐயத்தினை என்னால் உணர முடிகின்றது. ஐயா, நீங்கள் எப்படிப்பட்ட பொறியியல் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதனை கூறினீர்கள், ஆனால் எப்படி ஒரு பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வது? தரமான ஒரு பொறியியல் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்வோம். * குறிப்பிட்ட கல்லூரியில் தான் தேர்வு செய்யவிருக்கும் பிரிவு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? * தங்கள் தேர்வு செய்த கல்லூரியில் தகுதியான, நிலையான ஆசிரியர்கள் உள்ளனரா? * குறிப்பிட்ட பொறியில் துறைக்கு முதுகலை பட்டபடிப்பு அக்கல்லூரியில் உள்ளதா? * குறிப்பிட்ட துறைக்கு Accredation எனப்படும் துறை சார்ந்த தரச்சான்று பெற்றுள்ளது? * மாணவர்களில் வேலை வாய்ப்புகளில் கல்லூரியின் செயல்பாடு எப்படி உள்ளது? * மாணவர்களின் தேவைகள் கல்லூரி நிர்வாகத்தினரால் உணரப்படுகின்றதா? மேலும் பலதுறை தகவல்களுடன் அடுத்த இதழில். பேரா. மூர்த்தி செல்வக்குமரன், கல்வி ஆலோசகர் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு